• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சுற்றுசூழலை பாதிக்காத வண்ணம் மிதிவண்டி பாதைகள் அமைக்கப்படவுள்ளது

September 23, 2017 தண்டோரா குழு

கோவையில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுற்றுசூழலை பாதிக்காத வண்ணம் மோட்டார் வண்டிகளின் பயன்பாடு இல்லாத மிதிவண்டி பாதைகள் அமைக்கப்படவுள்ளது என கோவை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

கோவை மாநகராட்சியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் கோவை மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள எட்டு குளங்களை புனரமைப்பு மற்றும் மேம்பாடு செய்யும் பணிக்காக நியமிக்கப்பட்ட தொழில் நுட்ப ஆலோசனைக்குழு கலந்து கொண்டு திட்டத்திற்கான கருத்துகள் மற்றும் குளங்களை மேம்படுத்த கையாளப்பட வேண்டிய வடிவமைப்பு விபரங்களை பற்றி விளக்கம் அளித்தனர்.

மேலும், இத்திட்டத்தில் முதல் கட்டமாக எடுத்துக்கொள்ளப்படவுள்ள செல்வ சிந்தாமணி குளம், பெரிய குளம் மற்றும் வாலாங்குளம் ஆகியவற்றிற்கான முழுமையான வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும்விளக்கப்பட்டது.

“இம்மேம்பாட்டுப் பணிகள் இயற்கை சூழ்நிலையை பாதிக்காமலும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படா வண்ணமும் செயல்படுத்தப்படும். குறிப்பாக ஏரிகளில் வருடம் முழுவதும் நீர் வற்றிப்போகாமல் பாதுகாப்பது குறித்து உறுதி செய்யப்பட்டது,” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த நீர்நிலைகளின் கரையோரங்களில் பொதுமக்கள் பொழுது போக்கும் விதமாக படகு சவாரி,செயற்கை நீருற்றுகள் அமைக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. நடைபயிற்சி செய்ய ஏதுவாக நடைபாதைகள் ஏற்படுத்தப்படவுள்ளது. மிதவை பூங்கா மற்றும் பசுமை தோட்டங்கள் உருவாக்கி அவ்விடத்தில் பசுமை பூங்கா அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவினரிடம் திட்ட மதிப்பீடு பெறப்பட்டவுடன் மாநில அரசின் ஒப்புதல் பெறப்பட்டு குளங்களின் கரைகளை இணைத்து சுற்றுசூழலை பாதிக்காத வண்ணம் மோட்டார் வண்டிகளின் பயன்பாடு இல்லாத மிதிவண்டி பாதைகள் அமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க