• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோவில்

October 14, 2017 findmytemple.com

சுவாமி : உதிராபதீசுவரர், ஆத்திவனநாதர், மந்திரபுரீசுவரர், பிரமபுரீசுவரர், பாஸ்கரபுரீசுவரர்.

அம்பாள் : சூளிகாம்பாள், திருக்குழலம்மை.

தீர்த்தம் : சத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், அக்கினி தீர்த்தம், சந்திர தீர்த்தம், இந்திர தீர்த்தம், இயம தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், சீராள தீர்த்தம் என்னும் 9 தீர்த்தங்கள்.

தலவிருட்சம் : அத்தி மரம்.

தலச்சிறப்பு : கோயில் ஊரின் நடுவே கிழக்கு நோக்கியுள்ளது. இறைவன் சிறுத் தொண்ட நாயனார்க்குப் பைரவர் திருக்கோலத்தில் வந்து பிள்ளைக்கறியமுது கேட்டு அருள்புரிந்த தலம். இக்கோயிலுக்கு மந்திரபுரீசம், சக்திபுரீசம், இந்திரபுரீசம், ஆத்திவனம், பாஸ்கரபுரீம் என்னும் வேறு பெயர்ளும் உள்ளன. கோயிலை அடுத்து சிறுத் தொண்டர் வாழ்ந்த மாளிகை இன்று கோயிலாக உள்ளது.

தல வரலாறு : யானை முகம் கொண்ட கஜமுகாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் சம்ஹாரம் செய்தார். இதனால் அவருக்கு தோஷம் உண்டானது. தோஷம் நீங்க இத்தலம் வந்தார். சுயம்புவாக எழுந்தருளி இருந்த சிவனை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து தோஷம் நீக்கியருளினார். எனவே சிவன், “கணபதீஸ்வரர்” என்று பெயர் பெற்றார்.

நடைதிறப்பு : காலை 6.45 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்து இருக்கும்.

மேலும் படிக்க