• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு பவளவல்லி தாயார் உடனுறை பவளவண்ணர் திருக்கோவில்

February 21, 2017 findmytemple.com

சுவாமி : அருள்மிகு பவளவண்ணர்.

அம்பாள் : பவளவல்லி.

விமானம் : ப்ரவள விமானம்.

தீர்த்தம் : சக்கர தீர்த்தம்.

தலச்சிறப்பு : இங்குள்ள திருமால் பொன்நிறமேனியுடன் காட்சி தருவது தனி சிறப்பு.

தல வரலாறு :

ஒரு சமயம் வைகுந்தத்தில் திருமகளும், திருமாலும் அருகருகே அமர்ந்து ஆனந்தத்துடன் பேசிக் கொண்டு இருந்த போது திருமகள், திருமாலை நோக்கி, காத்தல், அருளல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் நடத்தும் சிவபெருமான் அருள்பெற்று தாங்கள், தங்கள் மேனியைப் பொன்னிறமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என விண்ணப்பித்தாள். இதைக் கேட்ட கார்வண்ணர் தேவி அப்படியே செய்கிறேன் எனக் கூறி, உன் விருப்பப் படியே பொன்னிற மேனிகொண்டு திரும்புவேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

வைகுந்தத்திருலிருந்து புறப்பட்ட திருமால் கச்சித் திருத்தலத்தை அடைந்து வீரட்டகாசத்தின் முன்பு தன் சக்கர ஆயுதத்தால் அழகிய தீர்த்தம் ஒன்றை உண்டாக்கினார். தினமும் சக்கர தீர்த்தத்திலே நீராடி, 14000 தாமரை மலர்களைக் கொண்டு வந்து அவற்றால் வீரட்டகாசரை வழிப்பட்டார். திருமாலின் வழிபாட்டைக் கண்டு மகிழ்ந்து ஈசன், தாய் உமையுடன் திருமாலுக்குக் காட்சிக் கொடுத்து பச்சை மேனியனே, உன் எண்ணத்தை யாம் அறிவோம் கவலை வேண்டாம், பவளம் போன்ற செந்நிறமேனியை உனக்குத் தந்தோம், என்று அருளினார்.

நடைதிறப்பு : காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 வரை.

அருகிலுள்ள நகரம் : காஞ்சிபுரம்.

கோவில் முகவரி : அருள்மிகு பவளவல்லி தாயார் உடனுறை பவள திருக்கோவில்,
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.

மேலும் படிக்க