• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு மாயகூத்தர் திருக்கோவில்

October 13, 2018 தண்டோரா குழு

சுவாமி : வேங்கடவானன்(மாயகூத்தர்).

அம்பாள் : அலமேலுமங்கை, குழந்தை வல்லி.

தீர்த்தம் : பெருங்குளம்.

விமானம் : ஆனந்த நிலையம்.

தலவரலாறு :

நவ திருப்பதிகளில் இது 7 வது திருப்பதி. நவகிரகங்களில் இது சனி பகவானுக்குரிய தலம். வேதாசரன் என்ற அந்தணருக்குப் பிறந்த கமலாவதி என்ற பெண் பகவானைக் குறித்து தவம் செய்ய, பகவான் காட்சி கொடுத்து விவாகம் செய்து கொண்டதாக ஸ்தல வரலாறு. பாலிகை (குழந்தை / தாயார் திருநாமம் கவனிக்க!) தவம் செய்த இடம் என்பதால் பாலிகை வனம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அச்மஸாரன் என்னும் அசுரன் பகவானுடன் யுத்தம் செய்ததாகவும் பகவான் அ‌‌வனை வீழ்த்தி அவன் மேல் நாட்டியமாடி அழித்ததாகவும் சொல்வார்கள். தேவர்கள் பிரார்த்தனைப்படி மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெற்றார். இத்தலத்தில் கருடன் பெருமாளுடன் உற்ஸவராக பக்கத்தில் எழுந்தருளியுள்ளார்.

தலவரலாறு :

இங்கு வசித்து வந்த வேதசாரண் குமுத வல்லி தம்பதியினரின் தவப்புதல்வியான கமலாவதி மானிடர் யாரையும் மணந்து வாழ மாட்டேன். இப்பெருமாளையே மணம் புரிவேன் என்று கடும் தவம் கொண்டாள் பெருமாளும் நேரில் தோன்றி அவளின் ஆசைப்படி தன் மார்பில் எற்றுக் கொண்டார். இன்றும் அப்பெருமாளின் நெஞ்சில் கமலாவதியைக் காணலாம். இதனால் தான் பெரும் பாக்கியம் அடைந்ததாக நினைத்த வேதசாரண் வேங்கடவானுக்கு நித்ய ஆராதனை செய்து வந்தார்.

இவரின் மனைவி குமுதவல்லி நீராட செல்லும் போது அச்மசாரன் என்னும் அரக்கன் அவளை கவர்ந்து சென்று இமயத்தில் சிறை வைத்தான். இதை அறிந்த வேதசாரன் இங்கு பெருமாளிடம் அருள்புரிய வேண்டினார். பெருமாளும் குமுதவல்லியை இமயமலையிலிருந்து தனது கருட வாகனத்தில் மீட்டு வந்தார். அச்மசாரன் இங்கு வந்து பெருமாளுடன் போர் புரிய அவன் மீது நர்த்தனம் செய்து அவனை வதம் செய்தார். இதனால் பெருமாளுக்கு ஸோர (அரக்கன்) நாட்டியன் தமிழில் மாயக்கூத்தன் என்ற திருநாமம் ஏற்பட்டது. தனக்கு உதவி புரிந்த கருடனுக்கு உற்சவமூர்த்தியுடன் ஏக ஆசனம் அளித்துள்ளார்.

நடைதிறப்பு :

காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : திருநெல்வேலி.

கோவில் முகவரி : அருள்மிகு மையகூத்தர் திருக்கோவில்,பெருங்குளம், தூத்துக்குடி மாவட்டம்.

மேலும் படிக்க