• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு மந்திரகிரி வேலாயுத சுவாமி திருக்கோவில்

October 19, 2018 findmytemple.com

சுவாமி : மந்திரகிரி வேலாயுத சுவாமி

தீர்த்தம் : ஞான தீர்த்த சுனை.

தலவிருட்சம் : கடம்ப மரம்.

தலச்சிறப்பு :

இங்குள்ள தல மரத்தை 12 முறை சுற்றி வந்து சன்னதியில் தீபம் ஏற்றுவதன் மூலம் மனஅமைதி, தொழிற்தடை நீங்குதல், எதிரிகள்நீங்குதல், திருமண வரம், குழந்தை பேறு அடைவார்கள் என்று கூறப்படுகிறது.இது ஒரு மலைக்கோவில் என்பது குறிப்பிடதக்கது.

தல வரலாறு :

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அந்த திருக்குமரன், பிரணவ மந்திரத்தை தனது தந்தைக்கு உபதேசித்த திருத்தலம் எது என்றால் சுவாமிமலை என்று சட்டென்று பதில் வரும். ஆனால் முருகப்பெருமானுக்கு, சிவன் உபதேசித்த திருத்தலம் எது என்றால், பலரும் திசை தெரியாதவர் போல் முழிக்கத் தான் செய்வார்கள். அத்தகைய சிறப்பு மிக்க திருத்தலம் கோவை மாட்டம் செஞ்சேரி மலையில் அமைந்துள்ளது. சூரபத்மனை அழிப்பதற்கு முன்பே முருகப் பெருமானுக்கு சிவன் உபதேசித்த திருத்தலம் இது என்பதால் மிகவும் பழமையான திருத்தலம் என்றால் மிகையாகாது.

சூரனின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதனை ஏற்று சிவன், தனது நெற்றிக் கண்ணில் இருந்து முருகப்பெருமானை தோற்றுவித்தார். சூரனை அழிக்கும் தருணம் நெருங்கியது.ஆனால் சூரர்கள் மாயையில் வல்லவர்கள் என்பதால் அவர்களை அழிக்க சத்ருசம்ஹார மந்திர உபதேசத்தை, முருகப்பெருமான் பெறுவது அவசியம் என்று பார்வதிதேவி விரும்பினார். அந்த மந்திரத்தை குமரனுக்கு உபதேசிக்கும்படி சிவபெருமானிடம் கூறினார் பார்வதிதேவி.

சிவபெருமான், முருகப்பெருமானை அழைத்து, ‘குமரா..! சத்ருசம்ஹார மந்திர உபதேசம் தானாக கிடைத்து விடாது. என்னை நினைத்து கடும் தவம் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த மந்திரம் கற்றுக் கொள்ளும் பாக்கியம் கிடைக்கும்.நான்கு வேதங்களாக இருக்கும் கடம்ப மரமும், தர்ப்பையும், கங்கை தோன்றும் இடமும், மகாவிஷ்ணுவுக்கு சிவ தீட்சை அளித்த இடமும் உள்ள இடத்தில் தவம் செய்’ என்று வழி கூறினார். சிவனின் அருளாசியுடன் தவம் புரிவதற்கு ஏற்ற இடத்தை தேடி முருகப் பெருமான் பூலோகம் வந்தார்.அப்போது, இந்த திருத்தலத்தில், நான்கு வேதங்களுக்கு இணையான கடம்ப மரமும், கங்கைக்கு நிகரான ஞானதீர்த்த சுனைநீரும், அருகேயே தர்ப்பையையும், சற்று தொலைவில் சின்னமலையில் சிவதீட்சை பெற்ற மகாவிஷ்ணுவும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க.. ‘தாம் தவம் இருக்க சரியான இடம் இது’ என்று முருகப்பெருமான் தீர்மானித்து அங்கேயே தவம் செய்தார்.

நடைதிறப்பு : காலை 6.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை நடைதிறந்திருக்கும்.

அருகிலுள்ள நகரம் : கோயம்புத்தூர்

கோயில் முகவரி : அருள்மிகு மந்திரகிரி வேலாயுத சுவாமி திருக்கோவில், தென்சேரி மலை, சூலூர் வட்டம்.கோயம்புத்தூர் மாவட்டம்.

மேலும் படிக்க