• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணர் திருக்கோவில்

January 17, 2017 findmytemple.com

சுவாமி : கல்யாண வெங்கட்ரமணர்.

அம்பாள் : ஸ்ரீ தேவி பூமிதேவி.

தலச்சிறப்பு : இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தலவரலாறு :

சுசர்மா என்னும் பக்தன் தனது மனைவியுடன் புத்திர பாக்கியம் வேண்டி திருப்பதி யாத்திரை மேற்கொண்டான். யாத்திரையின் போது காவிரிக்கரையில் தங்கி இருந்தான். அப்போது நாரதர் கனவில் தோன்றி திருமக்கூடலூர் என்ற கூடுதுறைக்கு செல்லுங்கள். அங்கு உங்களைச் சிலர் வரவேற்பர் என்று சொன்னதைத் தொடர்ந்து அங்கு சென்றனர். அங்கு தச்சர்கள் இருந்தனர்.

அவர்கள் சுசர்மாவை வரவேற்று கல்வேலை நடக்கும் இம்மலைக்கு அழைத்துச் சென்ற போது மலையில் பிரகாசமான ஒளி ஒன்று கிளம்பியது.இதனையடுத்து பாறை பிளவுண்டு பெருமாள் காட்சி தந்தார். கேட்ட வரத்தையும் அருளையும் தந்தார். இவ்வாறு பெருமாள் இங்கு எழுந்தருளியுள்ளார். தவிர ஆதிசேசனுக்கும், வாயு பகவானுக்கும் நடந்த போட்டியில் சிதறிய திருவேங்கடமலையின் ஒரு பகுதிதான் தான்தோன்றிமலை என்றும் கூறப்படுகிறது.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.

பூஜைவிவரம் : நான்கு காலபூஜை.

திருவிழாக்கள் : சித்திரை, புரட்டாசி, மாசி பெருந்திருவிழா நடைபெறுகிறது.

அருகிலுள்ள நகரம் : கரூர்.

மேலும் படிக்க