• Download mobile app
23 May 2024, ThursdayEdition - 3025
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு சுந்தராம்பிளை அம்மை உடனுறை கச்சபேஸ்வரர்

November 28, 2018 findmytemple.com

சுவாமி : அருள்மிகு கச்சபேஸ்வரர்.

அம்பாள் : சுந்தராம்பிளை அம்மையார்.

பிறமூர்த்திகள் : இத்திருகோயிலினுள்,

1. விஷ்ணு துர்கைச் சந்நிதி.
2. பஞ்ச சந்தி விநாயகப் பெருமாள் சந்நிதி.
3. பைரவர் சந்நிதி.
4. சூரியன் சந்நதி.
5. சரஸ்வதி தேவி சந்நதி.
6. ஆதிகேசவப் பெருமாள் சந்நதி.
7. வள்ளி தெய்வானை உடனுறை,
8. ஆறுமுகம் பெருமாள் சந்நிதி,

ஆகியோர் தனி தனிச் சந்தியில் எழுந்தருளி அருள் புரிந்து கொண்டுள்ளனர்.

தலச்சிறப்பு : இத்திருக்கோயிலினுள்,

1. அருள்மிகு கச்சபேசுவரர் பெருமான் சந்நிதி.
2. இட்ட சித்தீசப் பெருமான் சந்நிதி.
3. யோக சித்தீசப் பெருமான் சந்நிதி.
4. தரும சித்தீசப் பெருமான் சந்நிதி.
5. ஞான சித்தீசப் பெருமான் சந்நிதி.
6. சதுர்முகேசுவரப் பெருமான் சந்நிதி (வேதசித்தீசப் பெருமான்).
7. யுக சித்தீசப் பெருமான் சந்நிதி.
8. பாதாள ஈஸ்வரப் பெருமான் சந்நிதி.
9. லிங்கபேசர் பெருமான் சந்நிதி.
10. குளக்கரை சலகண்டேசுவரப் பெருமான் சந்நிதி மற்றும் மூலவர்க்கு வடக்கே சுற்றுப் பிராகாரத்தில் 9 லிங்கங்களையும் (108, 1008 லிங்கங்கள்) தரிசித்துப் பேறு பெறலாம்.

வழிபட்டுப் பேறு பெற்றவர்கள் :

திருமால், சரஸ்வதி, விநாயகர், சூரியன், பைரவர், சாத்தனார். ஆகியோர் கச்சபேசரை வழிபட்டு பேறு பெற்றவர் ஆவர்.

தல வரலாறு :

இத்திருக்கோவில் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முற்பட்டது ஆகும். தண்டியலங்காரம் என்னும் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கண நூலில் இத்திருக்கோயிலைக் குறித்து, கீழ் குறிப்பிட்ள்ளவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நேரிசை வெண்பாப் பாடல் :

“நீல மணிமிடற்ற னீண்ட சடைமுடியான்
நூலணிந்த மார்ப னுதல் விழியன் ‡தோலுடையான்
கைம்மான் மறியன் கனல் மழுவன் கச்சாலை
எம்மா னிமையோர்க் கிறை ‡என்பது”

கருங்குவளைபோன்றஅழகியமிடற்றினையும், முடியின் கண்ணே நீண்டு இருக்கப்பட்ட சடையினையும், மார்பினிடத்தே அணியப்பட்ட முப்புரி நூலினையும், நெற்றியின்கட் சேர்ந்து விழியினையும், உடையாக அசைத்த தோலினையும், கரதலத்தேந்திய மானினையும், கனல் போன்ற மழுவினையும், திருக்கச்சாலை (கச்சபேசும்) என்னும் திருப்பதியினையும், உடையவனாய் எம்மை யாண்டு கொண்ட பெரியோன் இமையவர்க்குத் தலைவன் என்று குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

அருள்மிகு கச்சபேசர் எனப் பெயர் வரக் காரணம் : திருமால் தசாவதாரத்தில் ஆமைவடிவம் கொண்டு இத்தலத்து ஈசனை-கச்சபேசனை-வணங்கினார். அதாவது கச்சபேசர் = கச்சப் + ஈசர் எனப் பிரிக்கலாம். இதன்படி கச்சபம் என்றால் ஆமையைக் குறிக்கும். ஆமைக்கு அருள் புரிந்த ஈசனே கச்சபேஸ்வரர் ஆனார். அதாவது திருமால் ஆமை வடிவம் கொண்டு இத்தலத்து ஈசனை வணங்கிய தால் இத்தலத்து ஈசனுக்கு கச்சபேஸ்வரர் எனப் பெயர் வந்தது.

கச்சபேஸ்வரரின் மகிமை :

இத்திருத்தலத்தில் எழுந்தருளி அருள் புரிந்து கொண்டு இருக்கும் கச்சபேசனை (வழிபட வேண்டும்) கும்பிட வேண்டும் என்று சென்றவர்களும், செல்ல வேண்டும் என நினைத்தவர்களும், சென்று கச்சபேசனைக் கண்டவர்களும், யாவரும் இவ்வுலகத்தில் துன்பம் நீங்கி இன்பம் எய்தி, மீளா முக்தியும் அடைவார்கள்.

இவ்வாலயத்தில் அமைந்துள்ள இட்ட சித்த தீர்த்தம் – குளத்தின் சிறப்புகள் : ஆலயத்தில் அமைந்துள்ள திருக்குளத்தின் பெயர் இட்ட சித்திக் தீர்த்தம் ஆகும். இக்குளத்தில் முழுகி குளிப்பவர்களுக்குச் சிவபெருமான் திருவருள் பாலிப்பார். இத்தீர்த்தக் குளத்தைக் கண்டவர்களும், தன் உடம்பில் இத்தீர்த்தத்தை தெளித்தக் கொண்டவர்களுக்கும், மூழ்கிக் குளிப்பர்களுக்கு அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு பேறு போன்ற உறுதிப் பொருளை அடைவார்கள் என்றும் சிவஞான முனிவர் அருளியுள்ளார். இந்த இட்ட சித்தி தீர்த்தக் குளத்தில் ஞாயிற்றுக் கிழமை முழுகினால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறந்திடும், மனைவி அமையாதவர்களக்கு நல்மனைவி அமைந்திடும், நோயில் துன்புறும் மக்கள் நோய் தீர்ந்து அவர்களின் ஆயுள் கெட்டிப்படும், கல்வி அறிவைப் பெறுவர். பொன் பொருள் இல்லாதவர் அனைத்துச் செல்வமும் பெற்றுச் சிறப்புடன் வாழ்வர். மற்றும் பதவி வேலை இல்லாதவர் பணியையும் பெற்று வாழ்வார்கள், என்று மாதவச் சிவஞான முனிவர் அவர்கள் திருக்குளத்தைக் குறித்து சிறப்பித்துக் கூறியுள்ளார்.

நடைதிறப்பு :

காலை 7.30 மணி முதல் 11.30 வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திருக்கோவில் திறந்திருக்கும்.

கோயில் முகவரி : அருள்மிகு சுந்தராம்பிளை அம்மை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவில்,காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.

மேலும் படிக்க