• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அழகர் திருக்கோவில்

October 22, 2018 findmytemple.com

சுவாமி : கள்ளழகர்,பரமஸ்வாமி,சுந்தராஜர்.

அம்பாள் : கல்யாண சுந்தரவல்லி தாயார்.

தீர்த்தம் : நூபுரகங்கை,சந்திரபுஷ்கரணி, கருடதீர்த்தம், அனுமார்தீர்த்தம் உள்ளிட்ட 108 புண்ணிய தீர்த்தங்கள்.

தலவிருட்சம் : சந்தன மரம்.

தலச்சிறப்பு :

சித்ரா பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பான திருவிழாவாக மதுரை மக்களால் கொண்டாடப்படுகிறது. தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும்.

திருத்தல வரலாறு :

ஒரு காலத்தில் எமதர்ம ராஜனுக்கு சாபம் ஏற்பட்டது. இச்சாபத்தை போக்க பூலோகத்தில் தற்சமயம் ‌கோயில் இருக்கும் அழகர் மலை விருசுபகிரி என்னும் இம்மலையில் தவம் செய்கிறார். இம்மலை 7 மலைகளை கொண்டது. தர்மராஜனின் தவத்தை மெச்சி பெருமாள் காட்சிதந்தார். இறைவனின் கருணையை போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளிடம் தினந்தோறும் நான் ஒரு மு‌றையாவது பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார். அதன்படியே பெருமாளும் வரம் தர இன்றும் இக்கோயிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எம தர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம். எல்லா மக்களுக்கும் அருள் தருமாறு ஏமதர்மராஜன் கூறவே, ஏமதர்மராஜனின் விருப்பத்தின் பேரில் இங்கு எழுந்தருளினார்.

அழகர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதில் முக்கியமானது சித்திரைப் பெருவிழாதான். சித்திரை திருவிழாவின் போது சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் திருக்கோலம் பூண்டு மதுரைக்கு எழுந்தருளுவார். இந்த சித்திரைத் திருவிழாவுக்கு ஒரு புராணக் கதையும் உண்டு.

தங்கை மீனாட்சிக்கு மதுரையில் திருமணம். ஊரே விழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது. தங்கையின் கல்யாணத்தைக் காண கிளம்புகிறார் அழகர் பெருமான். அவர் மதுரை எல்லையை அடைகிறார். இடையில் வைகை ஆறு. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றைக் கடந்து மதுரைக்குள் செல்வதற்குள், தங்கையின் கல்யாணம் முடிந்து விடுகிறது. இதனால் கோபமடையும் அழகர், மதுரைக்குள் வராமல் வைகை ஆற்றோடு திரும்பி ஊருக்குச் செல்கிறார். இதை அடிப்படையாக வைத்துத்தான் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரைத் திருவிழா நடைபெறுவதாக கூறப்படுகிறது.

வழிபட்டோர் : ஏமதர்மன்.

நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை திறந்திருக்கும்.

பூஜை விவரம் : அர்த்த ஜாம பூஜை.

திருவிழாக்கள் : சித்ரா பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் (பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடுவர்) சித்திரை திருவிழா,ஆடி பிரம்மோற்சவத் திருவிழா.

மேலும் படிக்க