• Download mobile app
31 Jan 2026, SaturdayEdition - 3643
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி

February 10, 2020

சுவாமி : அகஸ்தீஸ்வரர் சுவாமி.

அம்பாள் : அகிலாண்டேஸ்வரி(கருவளர்த்த நாயகி).

தலச்சிறப்பு : குழந்தை பேறு வேண்டுபவர்கள் இக்கோவிலில் வழிபடலாம். இங்குள்ள அம்மனை கருவளர்த்த நாயகி என்று மற்றொரு பெயரும் உண்டு. இத்தலத்தில், காகபுஜண்டர் யாகக்குழுவினர், உலகநன்மைக்காக காகபுஜண்டர் ஜீவநாடியில் அருளியபடி, இத்தலத்தில் லோபமுத்ராதேவிக்கும் அகஸ்திய மாமுனிவருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதை முன்னிட்டு நடந்த வேள்வியில், கர்நாடகாவில் உள்ள தலைக்காவிரி காவிரி உற்பத்தியாகும் இடத்தில், வெள்ள உபாதைகளை கருதி கிழக்கு முகமாக இருந்த நந்தியை மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்துள்ளனர். இதனால் இருமாநிலத்திற்கும் பஞ்சம் ஏற்பட காரணமாயிற்று. மீண்டும் காவிரியில் தேவையான நீர் கிடைக்கவும், இரண்டு மாநிலங்களும் செழிப்புடன் திகழவும் யாகம் செய்து, மீண்டும் பழையபடி நந்திபெருமானை கிழக்கு முகமாக பிரதிஷ்டை செய்ய வேண்டி சங்கல்பம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு யாகவேள்வியின் போது திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நடைதிறப்பு : காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி ,
கருவளர்ச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க