சுவாமி : பாண்டவ தூதர் திருக்கோலம் (கிழக்கே திருமுக மண்டலம்).
அம்பாள் : ருக்மணி, சத்யபாமா.
தீர்த்தம் : மத்ஸ்ய தீர்த்தம்.
விமானம் : சக்கர விமானம், வேத கோடி விமானம்.
தலச்சிறப்பு :
இத்தலம் ஏறத்தாழ 2000 வருடம் தொன்மை வாய்ந்தது என்று கூறப்படுகிறது.இந்த இடம் முன்பு திருப்பாடகம் என்று அழைக்கப்பட்டது.பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில், மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் புன்னகையோடு காட்சியளிப்பதோடு வேறு எங்கும் காண முடியாத வகையில் அழகுடன் அருள் பாலிக்கிறார்.
கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால் பாண்டவ தூதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார்.இங்குள்ள கல்வெட்டுக்களில் இப்பெருமானை தூத ஹரி என்று குறிக்கப்பட்டுள்ளது.இக்கோவில் முதலாம் குலோத்துங்க சோழனால் புதுப்பிக்கபட்டதாக இங்கு உள்ள கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது.புதத்தாழ்வார்,பேயாழ்வார்,திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் புகழ்ந்து பாடிய பேறு பெற்று மங்களாசாசனம் செய்த திருத்தலம். 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 49 வது திவ்ய தேசம் ஆகும்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு