• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு பஞ்சவர்னேஸ்வரர் திருக்கோவில் உறையூர், திருச்சி

March 4, 2017 findmytemple.com

சுவாமி : பஞ்சவர்னேஷ்வர்,திரு மூக்கிச்சுரத்தடிகள்.

அம்பிகை :
காந்திமதியன்னை.

புனித நீர் :
சிவ தீர்த்தம், நாக தீர்த்தம்.

மரம் : வில்வம் மரம்.

தலச்சிறப்பு : படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு ஐந்து நிறங்களை வெளிப்படுத்தியதாலும், உதங்க முனிவருக்கு ஐந்து வழிபாட்டு காலங்களிலும் முறையே இரத்தினம், படிகம், பொன், வைரம், சித்திரம் என்ற ஐந்து வேறு வேறு வண்ண வடிவம் காட்டினான். இறைவன் என்ற வரலாற்றின் அடிபடையலும் இங்குள்ள இறைவன் பஞ்சவர்னேஷ்வர் என்றும் தமிழில் ஐவண்ண பெருமான், ஐந்நிற பெருமான், ஐநிற நாயனார் என்றும் பெயர் வழங்க பெற்றதாக இக்கோவில் தல புராணம் கூறுகிறது.

தல வரலாறு : பழந்தமிழ் நாட்டை ஆண்ட முவேந்தர்கலான சேர ,சோழ ,பாண்டிய மன்னர்களில் முற்கால சோழர்களின் தலைநகராக விளங்கியது திருச்சி உறையூர் .உறையூறை ஆண்ட சோழ அரசன் ஒருவன் யானை மேல் அமர்ந்து நகர்வலம் வந்தபோது அந்த யானைக்கு திடீர் என்று மதம் பிடித்தது .பாகனும் செய்வதறியது திகைத்தனர் .அப்போது கோழி ஒன்று ஆவேசத்தோடு குரல் எழுப்பிக்கொண்டு பட்டத்து யானையின் தலையின் மேல் நின்று தன் அலகினால் குத்தியது .உடனே , யானை தன் மதம் அடங்கி பழைய நிலையை அடைந்தது .யானையை அடக்கிய கோழியானது தனது காலால் ஒரு இடத்தில அகழ்ந்து பார்த்தது .அப்போது அந்த இடத்தில் ஒரு சிவ லிங்கம் கிடைத்தது .அதை ஆலயம் எடுத்து வழிபாடு செய்தான் சோழமன்னன் .இதுவே உறையூர் பஞ்சவர்னேஷ்வர் திருக்கோவில்.மூக்கிச்சுரம் என்பது கோவில் பெயர்.

கோவிலின் கட்டடக்கலை : இக்கோவில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இதில் சாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கிறார். உதங்க முனிவருக்கு இறைவன் ஐந்து காலங்களிலும் ஐந்து வண்ணங்களிலும் காட்சி தந்த தலம். கலைச் சிற்பங்கள் நிறைந்த கோவில். இங்கு விநாயகர், முருகர், நடராஜர் சபை, தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், திருமால் பிரமன், துர்கை, பிட்சாடனர் முதலிய சந்ததிகள் உள்ளன.

சிறப்பு பூஜை : நான்கு கால பூஜைகள்

திருவிழா:

சித்தரை – பௌர்ணமி,
வைகாசி – பிரம்மோத்சவம் 10 நாட்கள்,
ஆனி-திருமஞ்சன விழா,
ஆடி – ஆடித்திங்கள்- பௌர்ணமி தினத்தன்று உதங்க முனிவருக்கு ஐந்து வர்ணங்களை காட்டியருளியதன்
நினைவாக பஞ்ச பிரகார விழா நடைபெற்று வருகிறது. ஆடி அம்மாவசை சிறப்பு .
ஆவணி –மூலத்திருவிழா,
புரட்டாசி — நவராத்திரி திருவிழா,
ஐப்பசி–பௌர்ணமி நாளன்று “அன்னாபிசேகம்”,
கார்த்திகை –கார்த்திகை தீபம்,
மார்கழி–திருப்பள்ளியெழுச்சி(30 நாட்கள்)
திருவாதிரை நாளில் கூத்தபெருமான் விழா .
தை –தைபூச விழா,
மாசி –மஹா சிவராத்திரி,
பங்குனி –உத்திரதிருவிழா .

கோவிலின் வழிபாடு நேரம்:

காலை 6.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை,

மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : திருச்சி

முகவரி : ஸ்ரீ பஞ்சவர்னேஷ்வர் திருக்கோவில், உறையூர் 620003, திருச்சி மாவட்டம்.

தொலைபேசி எண் :0431-2768546, 9791806457.

மேலும் படிக்க