சுவாமி : பகவதி அம்மன்.
தலச்சிறப்பு : பகவதி அம்மனை வழிபடும்போது, பழங்களால் அபிஷேகம் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும். வாழைப்பழ அபிஷேகம் செய்தால், சாகுபடி செய்த பயிர்கள் நல்ல மகசூல் தரும். பலாப்பழ அபிஷேகம் செய்தால், நினைத்தது நடக்கும். மாம்பழ அபிஷேகம் செய்தால், குழந்தை பாக்கியம் கிட்டும். மாதுளம்பழ அபிஷேகம் செய்தால், கோபம் தீரும். எலுமிச்சம்பழம் அபிஷேகம் செய்தால், பகைவர் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.
“எங்கும் நிறைந்த பரம்பொருளை, தீபச் சுடராகக் கண்டு வழிபடுவதால், வாழ்வில் துன்ப இருளை அகற்றி இன்ப ஒளி ஏற்றலாம்” என்பது சான்றோர் கருத்துப்படி நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பமுடன் வாழ பகவதி அம்மன் அருள் புரிவாள் என்பது நம்பிக்கை.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோவில் முகவரி : அருள்மிகுபகவதி அம்மன் திருக்கோவில்,
பம்பப்படையூர், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்