• Download mobile app
04 Dec 2025, ThursdayEdition - 3585
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு காளஹஸ்தீஸ்வர சுவாமி திருக்கோவில்

April 24, 2017 findmytemple.com

சுவாமி : அருள்மிகு காளஹஸ்தீஸ்வர சுவாமி.

அம்பாள் : அருள்மிகு ஞானாம்பிகை.

மூர்த்தி : கல்யாணசுந்தரமூர்த்தி, அஷ்டதச புஜமகா துர்க்கை, ஜீரகேஸ்வர்.

தலமரம் : வில்வம் மரம்.

தலச்சிறப்பு :

இத்தலத்தில் உள்ள ஞானாம்பிகையை வழிபட்டால் வாயுலிங்க சேத்திரமான காளஹஸ்தி பெருமானை வழிபட்ட பலன் கிடைக்கும். கடுமையான ஜுரம் அடிப்பவர்கள் இத்தல ஜுரகேஸ்வரருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து, புழுங்கல் அரிசி, நிவேதனம் செய்து மிளகுரசம், பருப்புதுவையல் நிவேதனம் செய்து, வில்வ அர்ச்சனை செய்து விபூதிப் பிரசாதத்தை சாப்பிட்டால் ஜுரம் குறைந்து விடும். இத்தலத்தில் உள்ள ஆராய்ச்சிமணியை அடித்தால் “ஓம்” என்ற ஓசை கேட்கும். இத்தலப் பெருமானும் மகாமகத்திற்கு எழுந்தருள்வார்.

தல வரலாறு :

தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் இக்கோயில் புதுப்பிக்கப்பெற்றது. இத்தலத்தில் உள்ள ஞானபிரகலாம்பிகையை வழிபட்டால் வாயுலிங்கத் தலமான காளஹஸ்தி பெருமானை வழிபட்ட பலன் கிடைக்கும். இக்கோயிலில் கார்த்தியாயினி சமேத கல்யாண சுந்தரமூர்த்தி சன்னதி தனிச் சிறப்புடன் விளங்குகிறது.

நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை.

பூஜை விவரம் : இரண்டு கால பூஜை.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு காளஹஸ்தீஸ்வர சுவாமி திருக்கோவில்,கும்பகோணம் அஞ்சல், தஞ்சை மாவட்டம் – 602 001.

மேலும் படிக்க