• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு எழுத்தறி நாதேசுவரர் திருக்கோயில்

July 18, 2017 findmytemple.com

சுவாமி : அருள்மிகு எழுத்தறிநாதர்.

அம்பாள் : அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை, நித்ய கல்யாணி.

மூர்த்தி : விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், சந்திரன், பைரவர், நடராஜர், தட்சிணாமூர்த்தி நால்வர்.

தீர்த்தம் : ஐராவத தீர்த்தம்.

தலவிருட்சம் : பலா, செண்பகம்.

தலச்சிறப்பு :

ஐராவதம் வழிபட்ட தலம். அகத்தியர் வழிபட்டு இலக்கண உபதேசம் பெற்ற தலம். ஈசன் தாமே கணக்கெழுதிக் கொடுத்த தலமாகும். கல்வி பயிலத் தொடங்கும் முன், இங்கு உள்ள இறைவனை வழிபட்டால் கல்வி தடையின்றி பயிலும் அருள் கிடைக்கும். இத்திருக்கோயிலில் உள்ள சிவலிங்கம் பெரியதாகும்.

தலவரலாறு :

முன் ஒரு சமயத்தில் தான் பெற்ற சாபம் காரணமாக சூரியன் தன்னுடைய பொலிவை இழந்து ஒளி குறைந்து இருக்கும் சமயம் தனக்கு எங்கு சாபம் நிவர்த்தியாகும் என்று யோகிகளிடம் கேட்க பூர்வ ஜென்ம பாவ நிவர்த்தி தலமான ஐராவதம் வழிபட்ட இன்னம்பரில் உள்ள (ஐராவதேஸ்வரர் ) சுயம்புநாத சுவாமியை வழிபட்டால் சாபம் நிவர்த்தியாகும் எனக் கூறுகின்றனர். இங்கு வந்து சிவ பெருமானை தரிசனம் செய்ய முயலும் பொழுது நந்தி, கொடிமரத்து விநாயகர், பலிபீடம் ஆகியன சிவபெருமானை மறைக்கவே தன் நிலையை அவர்களிடம் கூறி தனக்கு சாப விமோசனம் கிடைக்க உதவுமாறு வேண்டுகோள் விடுகின்றார். சூரியனின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த நந்தி, கொடிமரத்து விநாயகர், பலிபீடம் ஆகியோர் சூரியன் வழிபட சற்று விலகி வழி கொடுத்தனர். நந்தி விலகிய தலங்களில் இந்த தலமும் ஒன்று.

வழிபட்டோர் : அகத்தியர், ஐராவதர், சூரியன்.

பாடியோர் : திருஞானசம்பந்தர், அப்பர்.

நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

பூஜை விவரம் : நான்கு கால பூஜை.

திருவிழாக்கள் :

ஆனி மாதம் திருக்கல்யாணம்,

கார்த்திகை,

சோம வாரங்கள்,

நவராத்திரி,

திருவாதிரை.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு எழுத்தறி நாதேசுவரர் திருக்கோயில், சுவாமி மலை திருக்கோயிலின் இணைக்கோயிலாகும்.இன்னம்பூர் அஞ்சல், திருப்புறம் பியம் (வழி) – 612 003, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.

மேலும் படிக்க