• Download mobile app
04 Dec 2025, ThursdayEdition - 3585
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு அரங்குலநாதர் திருக்கோவில்

July 12, 2017 findmytemple.com

சுவாமி : அரங்குலநாதர் /ஹரதேஸ்வரர்.

அம்பாள் : பெரியநாயகி.

தலச்சிறப்பு :

அம்பாளை வழிபட்டால் நல்ல நன்மைகளை கூட்டுகிறார் தீய வினைகளை நீக்குகிறார். தோஷம் உடையவர்களை இங்கே தத்து குடுப்பதும் உண்டு. இது திருமண ஸ்தலமாக திகழ்கிறது. குழந்தை இல்லாதவர்கள், கல்யாணமாகதவர்கள், அம்பாளை வழிபட்டு பலன் அடையாலம். பூர நட்சத்திரம் உடையவர்கள் கல்யாணம் ஆகாதவர்களாக இருந்தால் அவர்கள் இக்கோவிலை வழிபட்டால் உடனே பலன் அடையாலம்.

தல வரலாறு :

2000ம் வருடங்களுக்கு முன் கரிகால சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோவில். இக்கோவிலில் ஒரு குளம் உள்ளது அக்குளத்து மட்டத்துக்கு லிங்கம் காணப்படவதால் அரங்குலநாதர்/ஹரதேஸ்வரர் என்று பெயர் பெற்றது. அந்த சுவாமியின் பெயர் மருவி திருவரங்குளம் என்று ஊரின் காரண பெயராக அமைந்தது. அம்பாளுக்கு இது பூர நட்சத்திர கோவில். இந்த கோவில் ராஜாக்கள் வேட்டையாடி வந்த போது பனை மரம் இருந்தது. இந்த பழங்கள் தங்க பழமாக காட்சி அளித்தது. அந்த பழத்தின் பெயர் பொற்பனை. அங்கு இருக்கும் விநாயகர் பெயர் பொற்பனை விநாயகர் என்று பெயர். இங்கு இருந்து 3 மைல் தொலைவில் முனிஸ்வரர் கோவில் உள்ளது. இந்த முனீஸ்வரர் பெயர் பொற்பனை முனீஸ்வரர். இந்த முனீஸ்வரர் புதுகோட்டை மாவட்டம் காவல் தெய்வம். மூலாதார சக்தி உடைய அம்மனாக கருதப்படுகிறது. வடநாட்டு செட்டியார் என்ற பிரிவினர்கள் இக்கோவிலுள்ள தானியத்தை கண்டுபிடித்து ராஜாக்களிடம் ஒப்படைத்தனர். அம்பாளே செட்டியாரின் குழந்தையாய் பிறந்து அவர்களின் குழந்தை பாக்கியத்தை தீர்த்தாள் மறுபடியும் இறைவனிடம் சேர்ந்தார்.

பரிகாரம் செய்யும் வழிமுறைகள் :

குழந்தை இல்லாதவர்கள், கல்யாணமாகதவர்கள், அம்பாளை வழிபட்டு பலன் அடையாலம். பூர நட்சத்திரம் உடையவர்கள் கல்யானமகதவர்களாக இருந்தால் அவர்கள் இக்கோவிலை வழிபட்டால் உடனே பலன் அடையாலம். ஏனென்றால் அம்பாளுக்கும் பூர நட்சத்திரம் இருந்து கல்யாணம் நடைபெற்றதால் இங்கு பூர நட்சத்திரம் உடையவர்கள் பலன் அடையாலம்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

பூஜை விவரம் :

வைகாசி 10 நாட்கள் சிவனுக்கு உற்சவம் நடைபெறும்.

அம்பாளுக்கு ஆடியில் 10 நாட்கள் உற்சவம் நடைபெற்று, 10வது நாள் அன்று தேரோட்டம் நடைபெறும்,

ஆடியில் திருகல்யாண வைபோகம் நடைபெறும்.

அருகிலுள்ள நகரம் : திருவரங்குளம்.

கோயில் முகவரி : அருள்மிகு அரங்குலநாதர் திருக்கோவில்,திருவரங்குளம், புதுக்கோட்டை.

மேலும் படிக்க