• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு அனலாடீஸ்வரர் திருக்கோவில்

October 9, 2017 findmytemple.com

சுவாமி : அனலாடீஸ்வரர் (சிவன்).

அம்பாள் : திரிபுரசுந்தரி.

மூர்த்தி : அப்புலிங்கம், பிருத்விலிங்கம், லக்ஷ்மி, தண்டபாணி.

தீர்த்தம் : ஈஸ்வர தீர்த்தம்.

தலவிருட்சம் : வில்வம் மரம்.

தலச்சிறப்பு : இத்திருத்தலத்தில் சிவன் அமைந்து இருக்கும் நேர் பின்புறம் முருகன் சன்னதி அமைந்துள்ளது. அப்புலிங்கம், பிருத்விலிங்கம், லக்ஷ்மி, தண்டபாணி, திரிபுரசுந்தரி ஆகிய சுவாமிகள் உள்ளன. திரிபுரசுந்தரி முன் ஈஸ்வர தீர்த்தம் அமைந்துள்ளது. இது பிரம்மா யாகம் செய்த தலங்களில் ஒன்று. பரமேஸ்வரர் நர்த்தனம் ஆடிய தலம்.

தல வரலாறு : இவ்வூரில் அதிகமாக தொட்டிய நாயக்கர் என்ற இனத்தை சேர்ந்தவர்கள் வாழ்வதால் இவ்வூருக்கு தொட்டியம் என்று பெயர் வந்தது. தொட்டியம் பகுதி காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வளமான பகுதி ஆகும். இந்த ஊரில் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. எனவே இந்த ஊரைச் சுற்றிலும் வாழைமரத் தோப்புகள் அதிகமான நிலங்களில் காணப்படுகிறது. எனவே இதை வாழை நகரம் என்று குறிப்பிடுவதுமுண்டு. இத்தலம் மன்னர்களால் கட்டபட்டது. மன்னரின் பெயர் தெரியவில்லை ஆனால் கோவிலில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

நடைதிறப்பு : காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 வரை.

திருவிழாக்கள் : சூரசம்ஹார நிகழ்ச்சி, சிவராத்திரி, நவராத்திரி, வைகாசிமாத விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படும்.

அருகிலுள்ள நகரம் : தொட்டியம்.

கோயில் முகவரி : அருள்மிகு அனலாடிஸ்வரர் திருக்கோவில்,தொட்டியம், திருச்சி மாவட்டம்.

மேலும் படிக்க