• Download mobile app
14 Oct 2024, MondayEdition - 3169
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீபஞ்சநதீஸ்வரஸ்வாமி திருக்கோவில்

November 13, 2018 findmytemple.com

சுவாமி : பஞ்சநதீஸ்வரஸ்வாமி.

தீர்த்தம் : காவேரி தீர்த்தம், சூரியபுஷ்கரணி(அயனரி தீர்த்தம்), நந்தி தீர்த்தம்.

தலவிருட்சம் : வில்வம் மரம்.

தலச்சிறப்பு :

காசிக்குச் சமமான தலங்ககளான: திருவாஞ்சியம், திருவெண்காடு, திருவையாறு, திருமயிலாடுதுறை, திருவிடை மருதூர், திருச்சாய்க்காடு ஆகிய ஆறு தலங்களில் இத்தலமும் ஒன்றாகப் போற்றப்படும் சிறப்பு உடையது.

திருவையாறு பெயர்க்காரணம் :

திருநந்தி தேவருக்கு ஐயாறப்பர் கங்கை நீர், பிரமங்கமண்டல நீர், அம்மையின் கொங்கை பால் மேகத்தின் நீர், ரிஷப நந்தியின் வாய்நுரை நீர் ஆகிய ஐந்து நீரினால் அபிஷேகம் செய்வித்து அவை காவிரியில் கலந்த உடன் திரு+ஐ+ஆறு திருவையாறு ஆகா புராணங்கள் கூறுகின்றன.

தல வரலாறு :

இத்திருக்கோவில் முதன் முதலாக “பிரியவிரதன்” எனும் சூரிய வம்ச சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக வரலாறு. கி.மு. முதலாம் நூற்றான்டில் வாழ்ந்த சோழப்பேரரசன் “கரிகாற்பெருவளத்தான்” இவன் காடு கெடுத்து நாடாக்கி வளம் பெருக்கியவன், கல்லணை கட்டி, காவிரிக்கு கரை எழுப்பி, இமயத்தே புலி பொறித்து வெற்றியுடன் வரும் வழியில், ஐயாற்றை அடைந்ததும், அவன் ஏறி வந்த தேர் பூமியில் அழுந்தி இடம் பெயரவில்லை. “இதன் அடியில் ஏதோ ஓர் சக்தி ஈர்க்கிறது” என உணர்ந்து காட்டை அழித்து பூமியை அகழ்ந்தான்.

அடியில் சிவலிங்கம், சக்தி, விநாயகர், முருகன், சப்த மாதர்கள், சண்டர், சூரியன் திருஉருவங்களும் யோகி ஒருவரின் சடைகள் பரந்து, விரிந்து, புதைந்து வேரூன்றி காணப்பட்டன. மேலும் அகழவே, நியமேசர் எனும் அகப்பேய் சித்தர் கண்டுபிடிக்கப்பட்டது. அவரும் கருணை கூர்ந்து கரிகாலனிடம், “தேவர்களும், நந்தீசரும் வழிபட்ட மகாலிங்கத்திற்கும் கோவில் எடுப்பாயாக” எனக் கூறி எவராலும் வெல்லற்கரிய தண்டமொன்றும் அளித்து கோவில் கட்டுவதற்கு வேண்டிய பொருளும் நந்தியின் குலம் படியில் கிடைக்கு என அருள் புரிந்தார். அது போலவே கரிகாற்சோழன் சிறப்பாக கோவில் கட்டி, குடமுழுக்கும் செய்து, நிவந்தங்களும் அளித்தான். கரிகாற் சோழனுக்கு ஐயாறப்பரே என்ற எல்லாம் வல்ல சித்தர் வடிவில் வந்து, சுயம்பு வடிவில் உள்ள தன் இருப்பிடத்தை காட்டி கோவில் கட்ட செய்தான். ஆதரமாக, கர்ப்பகிரகத்தில் விரிசடை படர்ந்திருப்பதால் சென்று மிதிக்ககூடாது என்பதும், சோழனால் கட்டப்பட்ட செம்பிய மண்டபமே செப்பேச மண்டபமாகி இருப்பதும் -கரிகாலசோழன், அவர் மனைவி, இருவரின் சிலைகள் இருப்பதும் கண்டு உணரலாம்.

நடைதிறப்பு : காலை 6.00 முதல் மதியம் 12.00 வரை, மாலை 4.00 முதல் இரவு 9.00 வரை.

அருகிலுள்ள நகரம் : தஞ்சாவூர்.

கோயில் முகவரி : ஸ்ரீபஞ்சநதீஸ்வரஸ்வாமி திருக்கோவில்,திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க