• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரட்டைத் திருப்பதி திருக்கோவில்(கேது)

July 27, 2019 findmytemple.com

சுவாமி : அரவிந்தலோசனன், வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கு பார்த்த திருமுக மண்டலம்.

அம்பாள் : கருத்தடங்கண்ணி.

விமானம் : குமுதவிமானம்.

தலச்சிறப்பு : தேவிபிரான் சன்னதியில் யாகம் முடித்து சுப்ரபர் தினந்தோறும் வடக்கு பக்கத்தில் இருந்து தடாகத்திலிருந்து தாமரை மலர்களை கொய்து வந்து தேவபிரானை வழிபட்டு வந்தார். தினமும் இத்தகைய அழகு மலர்களை எங்கிருந்து எடுத்து வருகின்றார் என்று பார்க்க பெருமாள் சன்னதிக்கு வடக்கே நின்று பார்த்தார். மலர்களுடன் வந்த சுப்ரபர் பெருமாளை பார்த்து தன்னை பின் தொடர காரணம் கேட்டபொழுது. உம்முடைய செந்தாமரை புஷ்ப பூஜைக்கு மயங்கி இங்கே இருந்தோம். எனக்கும் தேவபிரானோடு சேர்ந்து அபிஷேகம், அர்ச்சனை செய்யுமாறு கூறினார்.

சுப்ரபர் பெருமாளின் வேண்டுகோளின்படி பெருமாளை பிரதிஷ்டை செய்து இரு கோவில்களுக்கும் நாள் தவறாமல் பூஜை செய்து வந்தார். தனக்கு தாமரைப் பூவினால் அர்ச்சனை செய்பவரின் சகல பாவங்களையும் நீக்கி அருள் தருவேன் என்று கூறினார். இந்த பெருமாளை அஸ்வினி, தேவர்கள் தங்களுக்கு அவிர்ப்பாகம் வேண்டி, பூமியில் வைத்திய சாஸ்திரம் பின்பற்றாததாலும் பிரம்மனிடம் முறையிட இப்பெருமாளை நோக்கி வழிபட்டு பெருமாளை தாமரை மலரை கையில் கொண்டு காட்சியளித்து குறை நீக்கினார். அஸ்வினி, தேவர்கள் மருத்துவத்தின் தலைவர்கள் கங்கை நதிக்கரையில் வாழ்ந்த விபீதகன் என்றவன் இந்த தீர்த்தத்தில் நீராடி தனது குஷ்ட நோயை போக்கியதால் அவன் நெடுங்காலம் இத்தலத்தில் தங்கி இரு பெருமாளுக்கும் தொண்டு செய்ததாக வரலாறு. இத்தலத்தில் தான் பெருமாளோடு தாயாரையும் நம்மாழ்வார் மங்களாஸாஸனம் செய்துள்ளார்.

நடைதிறப்பு : காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடை திறந்திருக்கும்.

அருகிலுள்ள நகரம் : திருநெல்வேலி.

கோயில் முகவரி : இரட்டை திருப்பதி திருக்கோவில்,

திருத்தொலைவில்லி மங்கலம், தூத்துக்குடி மாவட்டம்.

மேலும் படிக்க