• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில் வலங்கைமான்

June 21, 2018 findmytemple.com

சுவாமி:அருள்மிகு மகா மாரியம்மன்.

தலச்சிறப்பு:மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் இந்த அம்பாளை வேண்டிக்கொள்வர்.நோய் குணமானவுடன்,’பாடைகாவடி’எடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றுவர். பக்தர்கள்,”தன் உடல் நலமடைந்தால் உற்சவ காலத்தில் பாடை மீது படுத்து ஆலயத்தை வலம் வருவதாக வேண்டிக் கொள்வர்”.

பங்குனி மாதம் நடைபெறும் உற்சவத்தின் போது ஆயிரக்கணக்கான பாடை வழிபாடுகள் நடைபெறும்.உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பாடை மீது படுக்க,கயிறால் கட்டுவர்.பிறகு சுமந்து வருவர்.கொள்ளிச் சட்டி எடுக்க வேண்டிய முறை உள்ளவர் அதனை எடுத்துக் கொண்டு முன்னால் வருவார்.இவர்கள் ஆலயத்தை வலம் வந்ததும் பாடை பிரிக்கப்படும்.பிரித்ததும் மஞ்சள் நீரைத் தெளிக்க,படுக்கும் போது மயக்கமுற்றவர் தெளிந்தெழுவார்.வேண்டுதல் நிறைவேற்றப்பட்டதும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார்கள்.இப்படிப்பட்ட பாடைக் காவடி வழிபாடுகளை ஏற்பதுதான் இந்த மாரியம்மனுக்குச் சிறப்பாகும்.

அருகிலுள்ள நகரம்:கும்பகோணம்.

கோயில்முகவரி:அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,வலங்கைமான் – 612 804, திருவாரூர் மாவட்டம்.

மேலும் படிக்க