• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு சோமநாதர் திருக்கோவில்

April 23, 2018 findmytemple.com

சுவாமி: சோமநாதேஸ்வரர்.

அம்பாள்: வேயுறு தோளியம்மை, மகாலட்சுமி, ஆதித்ய அபயப்ரதாம்பிகை, வேதநாயகி, ஆலாலசுந்தரநாயகி,துர்க்கை.

மூர்த்தி: துவார விநாயகர்,சிந்தாமணி கணபதி,சிவலோக நாதர்,காசி விஸ்வநாதர், மகாலட்சுமி,நடராசர்,கால பைரவர்,முனையாடுவார் நாயனார்.

தீர்த்தம்:புஷ்கரணி, செங்கழு நீரோடை, பத்திரகாளி தீர்த்தம், பருதிகுண்டம், வருண தீர்த்தம்,சூரிய தீர்த்தம்.

தலவிருட்சம்:மகிழ மரம்.

தலச்சிறப்பு :

சோமநாத சுவாமி சுயம்பு மூர்த்தியாக,இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் தொழுத மூர்த்தியாக, இப்பூவுலகில் கைலாசமாக விளங்கும் புண்ணியத் தலத்தில் அருள்பாலிக்கிறார்.இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சோமநாத சுவாமி சகல சாபங்களையும்,தோஷங்களையும் நீக்க வல்லவர்.இத்திருத்தலம் காவிரி ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது.சோமநாதசுவாமி கொலுவிருக்கும் விமானம் இருதளம் எனப்படும் கீர்த்தி மிகு விமானம் ஆகும்.சூரியநாராயணனே இங்கு தங்கி,அப்பனாம் சோமநாதப் பெருமானையும்,அம்மையாம் வேயுறு தோளியம் பாளையும் தொழுதேத்திய புகழ்மிக்க தலமிது.

பெரும் பதவிக்காரனாகிய தேவேந்திரனே உருவாக்கி,தொழுதேத்திய திவ்ய மூர்த்தியாம் இந்த சோமநாத மூர்த்தி.சகல பிறவிகளிலும் ஏந்திய சாபங்களை,தோஷங்களை நீக்க வல்லவர்.எந்த ஒரு இன்பத்திற்கும்,துன்பத்திற்கும் அடிப்படையான காரணம் உண்டு.துக்கங்களைக்களையும், சங்கடங்களை நீக்கச் செய்யும் கருவூலமே இச்சோமநாதப்பெருமான்.ஒவ்வொரு ஆண்டும்,ஆவணி மாதமான சூரியன் ஆதிக்கங் கொண்ட இத்திங்களில்,சுவாமி மீது சூரிய ஒளி படுவது சிறப்பு ஆகும்.

இத்தலத்தில் நவகிரகங்கள் கிடையாது.ஆனால்,நவகிரகங்கள் ஒன்றிணைந்து,ஒரே தீர்த்தமாக,“ஒன்பது தீர்த்தம்” என்றே போற்றப்படும் புஷ்கரணி இங்குள்ளது.பல கோயில் சென்று பூஜைகள் புரிந்து பயனின்றி போனாலும் இத்தலத்தில் ஒன்பது தீர்த்த மெனும் புஷ்கரணியில் நீராடினால் நவகிரக தோஷங்கள் உள்ளிட்ட சகல தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

மேலும் படிக்க