• Download mobile app
23 Jun 2025, MondayEdition - 3421
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில்

July 16, 2018 findmytemple.com

சுவாமி:சப்தரிஷீஸ்வரர் (சிவன்).

அம்பாள்:பெரிய நாயகி,மகாலட்சுமி,பைரவி (காளி).

மூர்த்தி:தட்சிணாமூர்த்தி,அர்த்தநாரீஸ்வரர்,பிட்சாடனர்.

தலச்சிறப்பு:மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவாக எழுந்தருளியுள்ளார் சப்தரிஷீஸ்வரர். அழகிய சுயம்பு லிங்கம் மேற்கு பார்த்த சந்நதி.திருத்தவத்துறை நாதர் மற்றும் தேஜோவிடங்கர் ஆகிய திரு நாமங்களும் உண்டு.அம்பாள் மஹா சம்பத் கௌரி எனப்படும் பெரிய நாயகி கிழக்கு பார்த்து எழுந்தருளி,தனி சந்நதி கொண்டுள்ளார்.மகாலட்சுமி,பிட்சாடனர்,அர்த்தநாரீஸ்வரர்,பைரவி எனப்படும் காளி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.

இத்தலத்தில் வீணையைக் கையிலேந்தி,சற்றே வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கின்றார் தட்சிணாமூர்த்தி.இவரை “வீணா தட்சிணாமூர்த்தி” என்றே தலபுராணம் குறிப்பிடுகின்றது.சிவன் இசையின் தலைவன்.அதை உணர்த்தும் வகையில் அழகிய சடை முடியோடும்,கைகளில் வீணையோடும்,நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி.இத்தல தட்சிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேகம் செய்து,குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடக்கிறது.வினை தீர்க்கும் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தியை வணங்கினால் வளங்கள் பலவும் பெறலாம்.

இங்கு சற்றே வித்தியாசமான கோணத்தில் நவகிரக சந்நிதி வடிவமைக்கப் பெற்றுள்ளது.இத்தலத்தில் சூரிய பகவானை நோக்கி நவகிரக சந்நிதி அமைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும்.தோஷங்களால் பாதிக்கப்பட்டோர் நெய் விளக்கேற்றியும்,விசேஷ பூஜைகள் செய்தும்,நவகிரக சந்நிதியை ஒன்பது முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.இதனால் சகல தோஷங்களும் நீங்கப் பெறும் என்பது நம்பிக்கை.

அருகிலுள்ள நகரம்:திருச்சி.

கோயில் முகவரி:அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில்,லால்குடி,திருச்சி. மாவட்டம்.

மேலும் படிக்க