• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில்

July 5, 2018 findmytemple.com

சுவாமி:கற்கடேஸ்வரர்.

அம்பாள்:அருமருந்தநாயகி, அபூர்வநாயகி.

மூர்த்தி:கணபதி,முருகன்,சந்திரன்,தட்சிணாமூர்த்தி,துர்க்கை,தன்வந்தரி,அகஸ்தியர்.

தீர்த்தம்:நவபாஷாண தீர்த்தம்.

தலவிருட்சம்:பஞ்சதள வில்வம்.

தலச்சிறப்பு:தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் காவிரி நதியின் வடகரை தலங்களில் 42வது தலம் ஆகும்.கற்கடேஸ்வரர் திருக்கோவில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இத்தலத்தில் இரண்டு அம்பாள் தனிதனிச் சன்னதிகளில் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

கோவிலின் உள்ளே சென்றவுடன் முதலில் விநாயகர்,பலிபீடம் மற்றும் நந்தி உள்ளது.முன் மண்டபத்தில் அருமருந்துநாயகி,அபூர்வநாயகி ஆகிய இரண்டு அம்பாள் தனி தனி சந்நிதிகளில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்கள்.கருவறையில் இறைவன் கற்கடேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

கருவறை மேற்கு உட்பிரகாரத்தில் கணபதி,முருகன் மற்றும் கஜலட்சுமிக்கு சந்நிதிகள் உள்ளது. கருவறை கோஷ்டத்தில் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தியும் வடதிசை நோக்கி துர்க்கையும் உள்ளனர்.நால்வர் சந்நிதியும் உட்பிரகாரத்தில் உள்ளது.தன்வந்தரி,அகஸ்தியர் ஆகியோரும் சுற்றுப் பிரகாரத்தில் உள்ளனர்.

இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது.கோவிலின் நுழைவுவாயிலில் சந்திரன் சன்னதி உள்ளது. இத்தலத்தில் சந்திரன் யோக நிலையில், “யோக சந்திரனாக” காட்சி தருகிறார்.ஜாதகத்தில் சந்திர திசை உள்ளவர்கள் சந்திரனுக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி வழிபட்டால்,தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.கோவிலின் மதிற்சுவரைச் சுற்றி கிழக்கு திசை தவிர மற்ற மூன்று புறமும் நீர் நிறைந்த அகழி உள்ளது.

மேலும் படிக்க