• Download mobile app
18 Oct 2021, MondayEdition - 2077
FLASH NEWS
 • வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய தளங்கள் இயங்குவதில் பாதிப்பு
 • பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
 • ரூ.1 லட்சம் அபராதத்தை நிவாரண நிதியாக தர விருப்பமில்லை: நடிகர் விஜய் தரப்பில் விளக்கம்
 • பெகாஸஸ் உளவு மென்பொருளை இந்திய அரசு வாங்கியதா, இல்லையா? – ராகுல் காந்தி
 • தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
 • திருநங்கைகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை: மத்திய அரசு அறிவிப்பு
 • ரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது !
 • நடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு
 • அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!
 • 2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்
 • “அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா

அருள்மிகு அமிர்தநாராயணப் பெருமாள் திருக்கோவில்

September 12, 2019 https://www.findmytemple.com

சுவாமி : அமிர்தநாராயணப் பெருமாள்.

அம்பாள் : அமிர்தவள்ளி.

தலச்சிறப்பு : ராமானுஜர் வழிபட்ட தலம். அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரரை தரிசித்த பிறகு, அமிர்த நாராயண பெருமாளையும் தரிசனம் செய்தால் தான், திருக்கடையூர் வழிபாட்டு பலன் முழுமையாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. ராகு–கேது பரிகார தலமாகவும் கருதபடுகிறது.

திருத்தல வரலாறு : தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தனர். அசுரர்களை ஏமாற்றி விஷ்ணு அதை ஒரு கலசத்தில் வைத்தார். மீண்டும் கலசத்தை திறந்த போது அமிர்தம் சிவலிங்கமாக இருந்தது. பார்வதிதேவியின் அருள் இல்லாததால் தான் இவ்வாறு மாற்றம் ஏற்பட்டதாக விஷ்ணு கருதினார். தனது மார்பில் அணிந்திருந்த திருவாபரணங்களை கழற்றி, அவற்றைப் பார்வதிதேவியாகக் கருதி பூஜித்தார். அப்போது அம்பாள் அபிராமி என்ற திருநாமத்துடன் அங்கு தோன்றி, அமிர்தம் கிடைக்க அருள்பாலித்தாள். அமிர்தத்தை தேவர்களுக்கு விஷ்ணு பங்கிட்டு கொடுத்தார்.

இதனை அறிந்த ஒரு அசுரன், தேவரைப் போல வடிவம் தாங்கி அமிர்தத்தை பருகினான். சாகாவரமும் தேவபலமும் பெற்றான். அவனை வெட்டினார் விஷ்ணு. அமிர்தம் பருகியதால் அவனுக்கு உயிர் போகவில்லை. துண்டான உடல்கள் ராகு, கேது என்ற பெயர் பெற்று, நவக்கிரக மண்டலத்தில் இணைந்தனர். அபிராமி அம்மையின் தோற்றத்திற்கும், தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்க காரணமான விஷ்ணு திருக்கடையூரில் அமிர்த நாராயண பெருமாள் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவியும் உள்ளனர். அமிர்தவல்லித் தாயாரிடம் திருமணமாகாத பெண்கள் வேண்டிக்கொண்டால் சிறந்த மணமகன் அமைவார் என்பது நம்பிக்கை.

நடைதிறப்பு : காலை 6.00 முதல் 8.30 மணி வரை, மாலை 4.30 முதல் 7.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள நகரம் : நாகப்பட்டினம்.

கோயில் முகவரி : அருள்மிகு அமிர்தநாராயணப் பெருமாள் திருக்கோயில்,

திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

மேலும் படிக்க