• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எனக்கு புற்றுநோய்,தற்காலிக ஓய்வில் செல்கிறேன்.. ரோமன் ரெய்ன்ஸ் அறிவிப்பு

October 23, 2018

பிரபல WWE ரெஸ்லிங் வீரரான ரோமன் ரெய்ன்ஸ் தனக்கு புற்றுநோய் இருப்பதாக கூறி கடந்த “ரா” நிகழ்ச்சியில் தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.உலக அளவில் பலரும் விரும்பி பார்க்கும் நிகழச்சிகளில் WWE எனப்படும் ரெஸ்லிங் நிகழ்ச்சியும் ஓன்று.WWE ரா மற்றும் ஸ்மேக்டவுன் நிகழ்ச்சிகளில் தோன்றும் பல்வேறு ரெஸ்லிங் நட்சத்திரங்களில் முன்னணி வீரர் ரோமன் ரெய்ன்ஸ் ஆவார்.இவரது குடும்பத்தினர்,உறவினர் பலரும் ரெஸ்லிங் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளனர்.

ராக்,உசோஸ்,ரிகிஷி,டோங்கா கிட்,யோகோசுனா,உமாகா ஆகியோரும் இவரது உறவினர்களாவார்கள்.பல முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இவர் தற்போது யுனிவர்சல் சாம்பியனாக இருக்கிறார்.இதற்கடையில்,33 வயதாகும் ரோமன் ரெய்ன்ஸ் கடந்த 2008ம் ஆண்டு முதல் லுகிமியா எனப்படும் ரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜை புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.எனினும்,அதை மருந்துகள் கொண்டு சமாளித்து வந்துள்ளார்.

தற்போது 11 ஆண்டுகள் கழித்து புற்றுநோய் அவருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்த துவங்கியுள்ளது.இதனால்,நீண்ட கால ஓய்வு மற்றும் சிகிச்சையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ரோமனுக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில்,தன் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் விட்டுக் கொடுத்து விட்டு ஓய்வில் செல்வதாக அறிவித்துள்ளார். தன் ரெஸ்லிங் பயணம் இத்தோடு முடிந்து விடவில்லை தான் மீண்டும் வருவேன் என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து ரெஸ்லிங் நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர்,

“நான் இனிமேல் சாம்பியனாக இருக்க முடியாது.நீங்கள் யாரும் எனக்காக வருத்தப்பட வேண்டாம்.எனக்கு நம்பிக்கை இருக்கிறது.இது நான் ஓய்வு பெறும் பேச்சு அல்ல.நான் நிச்சயம் மீண்டு வருவேன்.இது பட்டம் வெல்வது பற்றியோ,உச்சத்தில் இருப்பது பற்றியோ அல்ல,இது முற்றிலும் ஒரு நோக்கத்துக்காக தான்” என கூறியுள்ளார்.அதைபோல் இவர் நீண்ட கால ஓய்வில் செல்வதாக WWE நிறுவனமும் அறிவித்துள்ளது.ரோமன் ரெய்ன்ஸ் இந்த திடீர் அறிவிப்பு அவரது ரசிர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது”.

மேலும் படிக்க