December 22, 2017
tamil.samayam.com
2018 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் லண்டனில் நவம்பர் 9-28 வரை நடைப்பெற உள்ளது.
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு லோகோ உருவாக்கி நாடு நாடாக சென்று அதற்கான விளம்பரம் செய்வது வழக்கம். அந்த வகையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் 2018க்கான லோகோ, மாஸ்கோவை அடிப்படையாக கொண்ட சுகா டிசைன் இரு லோகோவை உருவாக்கி கொடுத்துள்ளது.
அதில் ஒரு லோகோ நான்கு கைகள் இணைந்து செஸ் விளையாடுவது போன்று உள்ளது. மற்றொரு லோகோ செஸ் வீரர்களுக்கு மட்டுமில்லாமல், காண்பவர் அனைவரையும் முகம் சுழிக்கும் வண்ணம் ‘காமசூத்ரா செக்ஸ் பொசிஷன்’ போல உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த லோகோவை வைத்து எப்படி உலகம் முழுவதும் செஸ் போட்டியை பிரபலப்படுத்துவது. குழந்தைகள் இதைப்பார்த்தால் எந்த எண்ணம் தோன்றும் என முன்னாள் செஸ் சாம்பியன் சுசன் பொல்கர் தெரிவித்துள்ளார்.