December 22, 2017
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஓர் இடத்தினை பிடிக்க வேண்டுமென்று தொடந்து போராடி வருபவர் விக்ராந்த். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வரும் இவருக்கு படம் மூலம் கிடைத்த ரசிகர்களை விட ஆண்டுதோறும் நடக்கும் சிசிஎல் போட்டியில் இவர் கிரிக்கெட்டில் கலக்குவதை பார்த்து சேர்ந்த ரசிகர்கள் தான் அதிகம்.
இந்த வருடம் சிசிஎல் போட்டி இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது.ஆனால், விக்ராந்த் இந்த வருடம் “நான் விளையாட மாட்டேன், ஒரு சில விஷயங்களுக்கு மேல் மரியாதை மிக முக்கியம்” என கூறியுள்ளார்.எனினும், அவர் வெளியேரும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இந்நிலையில் விக்ராந்திற்கு ஆதரவாக நடிகர் விஷ்ணு விஷாலும் “உண்மை நண்பா” என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.