October 27, 2017
tamilsamayam.com
விஸ் நாட்டு டென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
சுவிட்ஸர்லாந்து நாட்டின் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவர் மார்டினா ஹிங்கிஸ். கடந்த 23 ஆண்டுகளாக டென்னிஸ் உலகில் பல சாதனைகளைப் படைத்து வெற்றி நடைபோட்ட இவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
தற்போது சிங்கப்பூரில் நடைபெற்று வரும் டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ் தொடரில் இரட்டையர் பிரிவில் தவானின் சான் யங் ஜங் உடன் இணைந்து விளையாடுகிறார். இத்தொடருடன் தன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் தனது நீண்ட பயணத்தை முடித்துக்கொள்வதாக ஹிங்கிஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள பேஸ்புக் பதிவில், கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் நான் எனது முதல் சர்வதேசப் போட்டியில் விளையாடினேன். இத்தனை ஆண்டுகளில் எனது விளையாட்டிலும் வாழ்க்கையிலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளேன். இப்போது ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டதாகக் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.