சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் முதல் முறையாக நடக்கவுள்ள ஐஸ் கிரிக்கெட்டில், முன்னாள் அதிரடி மன்னன் சேவக், பாகிஸ்தானின் ஷோயிப் அக்தர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைகளின் பின்னணியில் உள்ள செயிண்ட் மோர்டிசின் உறைந்த ஏரியில் வரும் பிப்ரவரி மாதம் நடக்கவுள்ளது. அதில், கிரிக்கெட் பிரபலங்கள் பலர் பங்கேற்கவுள்ளனர்.
முன்னணி வீரர்கள்:
வரும் பிப்ரவரி மாதம் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடக்கவுள்ளது. இதில் முன்னாள் முன்னணி வீரர்களான சேவக், அக்தர், கைப், ஜெயவர்தனா, லசித் மலிங்கா, கிரேம் ஸ்மித், காலிஸ், வெட்டோரி, நாதன் மெக்கலம், மைக் ஹசி, கிராண்ட் எலியட், மாண்டி பனேசர், ஒவாசிஸ் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
ஐசிசி., அனுமதி:
கடந்த 1988ல் இதேபோல சுவிட்சர்லாந்தில் முதல் முறையாக நடத்தப்பட்டது. ஆனால் பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலர் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு ஐசிசி.,யும் அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.
சம்பளம் எவ்வளவு:
இதில் பங்கேற்கும் முன்னணி வீரர்களுக்கு இந்த இரண்டு போட்டிகளில் பங்கேற்க ரூ. 25 லட்சம் முதல் ரூ. 32 லட்சம் சம்பளமாக வழங்கப்படும் என்றும், மற்ற வீரர்களுக்கு ரூ. 12 லட்சம் முதல் ரூ. 19 லட்சம் சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு