January 3, 2018
tamil.samayam.com
இந்திய அணியில் முன்னாள் கேப்டன் கபில்தேவுக்கு கிடைக்காத வாய்ப்பு கோலிக்கு கிடைத்துள்ளது உண்மையிலேயே அதிர்ஷ்டமான விஷயம் தான்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 5ல் கேப்டவுனில் துவங்குகிறது.
இத்தொடருக்காக இந்திய அணி வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இத்தொடர் குறித்து கணித்துள்ள ஜாம்பவான் சச்சின் முன்னாள் கேப்டன் கபில்தேவுக்கு கிடைக்காத் வாய்ப்பு கோலிக்கு கிடைத்துள்ளது அதிர்ஷ்டம் தான் என்றார்.
இதுகுறித்து சச்சின் கூறுகையில்,தற்போது தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணியில், மூன்று முழு நேர வேகப்பந்து வீச்சாளர் இடம் பெற்றுள்ளனர். அவர்களுடன் சிறந்த மிடில் ஆர்டர் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவும் இடம் பெற்றுள்ளார். அவரை நான்காவது வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்தும் வாய்ப்பு கோலி உள்ளது. கபில் தேவ் காலத்தில் கூட இந்திய அணியில் இப்படி ஒரு சிறப்பான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த வாய்ப்பு கிடைக்க கோலி உண்மையிலேய அதிர்ஷ்டசாலிதான். அதனால் இத்தொடர் நிச்சயமாக கடும் சவாலாக அமையும் .என்றார்.