• Download mobile app
19 Jan 2026, MondayEdition - 3631
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சச்சினின் 10ம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு!…

November 29, 2017 தண்டோரா குழு

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்திய 10ம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடியுள்ளார். அவர் கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். உலக முழுவதுமுள்ள ரசிகர்களுக்கு எந்த அளவிற்கு சச்சினை பிடிக்குமோ அந்த அளவிற்கு அவரது ஜெர்சி எண் 10க்கும் புகழ் உள்ளது. இதனால் அந்த எண் சச்சினின் அடையாளமாகவே பார்க்கபடுகிறது.

கடைசியாக 2012ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சச்சின் 10ம் எண் கொண்ட ஜெர்சியை பயன்படுத்தினார். அதன்பின் அந்த எண் கொண்ட ஜெர்சியை கொண்ட யாரும் பயன்படுத்தவில்லை.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்புவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான இளம் வீரர் சர்துல் தாக்கூருக்கு 10வது எண் ஜெர்சி வழங்கப்பட்டது.அது ரசிகர்களிடையே, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து 10ம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது. இது குறித்து ஐ.சி.சி.யிடம் அனுமதி வாங்கிய பின் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் தெரிகிறது.

மேலும் படிக்க