December 30, 2017
tamil.samayam.com
ரசிகரை தேடிச்சென்று தாக்கிய விவகாரத்தில் சில போட்டிகளில் விளையாட வங்கதேச வீரர் சபீர் ரஹ்மானுக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
வங்கதேச அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருபவர் சபீர் ரஹ்மான். இவர் சமீபத்தில் நடந்த உள்நாட்டு கிரிக்கெட் லீக் போட்டியில் ராஜ்ஷாஹி டிவிசனுக்காக விளையாடினார். போட்டியின் போது ஒரு ரசிகர் கத்திக்கொண்டே இருந்துள்ளார்.
கடுப்பான சபீர், நடுவரின் அனுமதியின்றி ரசிகர்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு சென்று அந்த ரசிகரை தாக்கியுள்ளார். இதை கவனித்த மூன்றாவது நடுவர் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அந்த வீரரின் ஒழுங்கின்மை குறித்து புகார் பதிவானது. வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவரின் நடவடிக்கையால் அடுத்த சில சர்வதேச போட்டிகளில் விளையாட சபீர் ரஹ்மானுக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.