• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மரண அடி கொடுத்த நியூசிலாந்து

December 26, 2017 tamil.samayam.com

கிறிஸ்ட் சர்ச்:

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி மகா மட்டமான தோல்வியை சந்தித்தது.

நியூசிலாந்துசென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியிலும் நியூசிலாந்து அணி வென்றது.

இரு அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி ‘பாக்சிங் டே’ என கருதப்படும் கிறிஸ்துமஸ் மறுநாளான இன்று கிறிஸ்ட்சர்ச்சில் நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் லதாம், முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

டெய்லர் அசத்தல்:

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஒர்க்கர் (2), முன்ரோ (21) சொதப்பலான துவக்கம் அளித்தனர். பின் வந்த புரூம் (2) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

மழை குறுக்கீடு:

அடுத்து வந்த அனுபவ டெய்லர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் லதாம் (37) நிலைக்கவில்லை. நியூசிலாந்து அணி, 23 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது.

சுலப இலக்கு:

தொடர்ந்து மழை நீடித்ததால் போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 23 ஓவரில் 166 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது,தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, வழக்கமான சொதப்பல் துவக்கத்தை அளித்தது. 9 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை பறிகொடுத்தது.

கெயில் (4), வால்டன் (0), ஹோப் (2), முகமது (1), ஹோப் (1) என அனைவரும் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. பின் வந்த வீரர்களில் ஹோல்டர் (34), பாவெல் (11), மில்லர் (20*) ஆகியோர் தவிர, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி, 23 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 99 ரன்கள் மட்டும் எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த தோல்வி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும், வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என இழந்தது.

மேலும் படிக்க