• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்டம்பிங்கில் தன் சாதனையை முறியடித்த தோனி!

October 30, 2018 தண்டோரா குழு

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கீமா பவுலை ஸ்டம்பிங் செய்ததன் மூலம்,தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி 5 ஒருபோட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.இதற்கிடையில் இவ்விரு அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றது.இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

இப்போட்டியின் போது 28வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா பந்து வீச கீமா பவுல் எதிர் கொண்டார்.அப்போது பவுல் விட ஸ்டம்புக்குப் பின்னால் இருந்த தோனி,கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்தார்.பின்னர்,மூன்றாவது அம்பயரிடம் கேட்க, அது விக்கெட் என உறுதி செய்யபட்டது.

இந்த விக்கெட்டின் போது தோனி வெறும் 0.08 விநாடிகளில் ஸ்டம்பிங் செய்திருந்தார்.முன்னதாக,2016ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அப்போதைய கேப்டன் பெய்லியை தோனி ஸ்டம்பிங் செய்தது தான்அதிவேக ஸ்டம்பிங்காக இருந்தது.இப்போது தனது சாதனையையே தோனி முறியடித்திருக்கிறார்.தற்போது இந்த வீடியோவை தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க