December 23, 2017
tamil.samayam.com
இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற கேரளா, தமிழ்நாடு இடையேயான கால்பந்து போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து தொடரில், இந்த ஆண்டு 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதில் நேற்று இரவு நடைபெற்ற 30வது லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டா்ஸ் அணியும், சென்னை எப்.சி. அணியும் மோதிக் கொண்டன.
ஆட்டம் தொடங்கியது முதலே விறுவிறுப்பாக நகா்ந்தாலும் இரு அணி வீரா்களாலும் முதல் பாதியில் கோல் அடிக்க முடியவில்லை. இந்நிலையில் இரண்டாம் பாதியிலும் இரு அணி வீரா்களும் அதே உத்வேகத்துடன் களத்தில் காணப்பட்டனா்.
ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சாியாக பயன்படுத்திக் கொண்ட ரினே மிஹெலிக் கோல் அடித்தாா். அடுத்ததாக 89வது நிமிடம் கேரளா அணியின் வினீத் கோல் அடித்தாா். இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் இருந்தது.
தொடா்ந்து இரு அணி வீரா்களாலும் கோல் அடிக்க முடியாததால் போட்டி டிராவில் முடிவடைந்தது. ஆட்டத்தின் இறுதியில் இரு அணியிருக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.