• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென் ஆப்ரிக்க காயத்துக்கு மருந்தாக இலங்கை செல்லும் இந்தியா!

January 19, 2018 tamil.samayam.com

தென் ஆப்ரிக்க தொடக்கு பின் இந்திய அணி இலங்கை செல்கிறது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 2-0 என இழந்துவிட்டது.இந்நிலையில், தென் ஆப்ரிக்க தொடர் வரும் பிப்ரவரி மாதம் 24ல் முடிவுக்கு வருகிறது. இத்தொடருக்கு பின் இந்திய அணி இலங்கை செல்லவுள்ளதாக இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ.,) அறிவித்துள்ளது.

இலங்கை செல்லும் இந்திய அணி, 7 சர்வதேச டி-20 போட்டிகளில் பங்கேற்கிறது. இத்தொடரில் வங்கதேசம், இலங்கை, இந்தியா ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கிறது. மார்ச் 6ம் தேதி துவங்கும் இத்தொடர் 18 மார்ச்சில் முடிவுக்கு வருகிறது.

அட்டவணை:

6 மார்ச் 2018 : இலங்கை – இந்தியா
8 மார்ச் 2018 : வங்கதேசம் – இந்தியா
10 மார்ச் 2018 : இலங்கை – வங்கதேசம்
12 மார்ச் 2018 : இந்தியா – இலங்கை
14 மார்ச் 2018 : இந்தியா – வங்கதேசம்
16 மார்ச் 2018: வங்கதேசம் – இலங்கை
18 மார்ச் 2018 : ஃபைனல்

மேலும் படிக்க