• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னிடம் பாரபட்சமாக நடந்துகொண்டார் – பிசிசிஐயிடம் மிதாலி ராஜ் புகார்

November 27, 2018 தண்டோரா குழு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ்,பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது குற்றம்சாட்டி பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளார்.வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 6 வது மகளிர் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நான்காவது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.இத்தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இப்போட்டியில் மிதாலி ராஜ் நீக்கப்பட்டார்.இதற்கிடையில்,இத்தொடரில் இரண்டு அரைசதங்கள் விளாசிய மிதாலிராஜ் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.மேலும் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில்,இதுதொடர்பாக விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ள மிதாலி ராஜ்,தாங்கள் வெஸ்ட் இண்டீசுக்கு சென்றதில் இருந்து பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னிடம் பாரபட்சமாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.தற்போது இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க