• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி!

November 21, 2018 தண்டோரா குழு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி 3 டி20,4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பிரிஸ்பென்னே கப்பா மைதானத்தில் நடைப்பெற்றது.

இதில்,டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.தொடக்க வீரராக களமிறங்கிய ஆர்கி சார்ட் 7(12) ரன்களில் வெளியேற,அரோன் பின்ச் 27(24) ரன்கள் குவித்தார்.இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்த வெளியேற கெளன் மேக்ஸ்வெல் மட்டும் நிதானமாக விளையாடி 46(24) ரன்கள் குவித்தார்.இதற்கிடையில் ஆட்டத்தின் 16.1-வது பந்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.பின்னர் இரு அணிகளுக்கும் 17 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டது.இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது.

டக்வேர்த் முறைப்படி 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.தொடக்க வீரராக களமிறங்கிய ரோகி ஷர்மா 7(8) ரன்களில் வெளியேற மறுமுனையில் அதிரடியாக விளையாடியாக ஷிகர் தவான் 42 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார்.பின்னர்,களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற விருவிருப்பான இறுதி கட்டத்தினை இந்தியா சந்தித்தது.கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா இருந்தது. அப்போது,அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்திய அணிநிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் படிக்க