• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கை தொடரில் உலக சாதனை படைக்க காத்திருக்கும் அஷ்வின்!

November 14, 2017

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் மேலும் ஒரு உலக சாதனை படைக்க காத்திருக்கிறார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. முதல் டெஸ்ட் வரும் 16ல் கொல்கத்தாவில் துவங்கவுள்ளது.

இத்தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் மேலும் ஒரு உலக சாதனை படைக்கவுள்ளார்.

இத்தொடரில் அவர் இன்னும் 8 விக்கெட் கைப்பற்றும் பட்சத்தில், சர்வதெச டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலர் என்ற புதிய உலக சாதனை படைப்பார்.

தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லி (56 டெஸ்ட்) முதலிடத்தில் உள்ளார்.

இதுவரை அஷ்வின் 52 டெஸ்டில் 292 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இத்தொடரில் 3 டெஸ்டிலும் சேர்த்து மொத்தமாக 8 விக்கெட் கைப்பற்றினால் கூட லில்லியின் உலக்சாதனையை அஷ்வின் முறியடிப்பார்.

மேலும் படிக்க