• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் ஹிரிடே ஹஸாரிகா

September 7, 2018 தண்டோரா குழு

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஜூனியர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஹிரிடே ஹஸாரிகா தங்கம் வென்றார்.

தென்கொரியாவின் சாங்வான் நகரில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் (ஜூனியர்) ஹிரிடே ஹசாரிகா,ஈரான் வீரர் அமிர் முகமது இருவரும் 250.1 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தனர்.இதற்காக, அவர்களுக்கிடையே ஹூட்ஆப் வாய்ப்பு வழங்கப்பட்டது.இந்த வாய்ப்பில் ஹசாரிகா 10.3 புள்ளிகளும்,அமிர் முகமது 10.2 புள்ளிகளும் பெற்றனர்.இதனையடுத்து 0.1 புள்ளி வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை ஹசாரிகா வென்றார்.அமிர் முகமதுவுக்கு வெள்ளிப் பதக்கமும்,228.6 புள்ளிகள் பெற்ற ரஷ்ய வீரர் கிரிகோரி வெண்கலம் வென்றார்.

மேலும் படிக்க