• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

FIFA World Cup 2018: கடைசி நேரத்தில் உருகுவே ‘த்ரில்’ வெற்றி:

June 16, 2018 tamilsamayam.com

எகிப்து அணிக்கு எதிரான கால்பந்து உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் உருகுவே கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்.கடந்த 2014ல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது.

இதையடுத்து இந்த ஆண்டுக்கான 21வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடக்கிறது. வரும் ஜூலை 15 வரை ரஷ்யாவில் இத்தொடர் நடக்கிறது.32 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ரஷ்யாவின் 11 முக்கிய நகரங்களில் 64 போட்டிகள் நடக்கிறது.

இதன் ஃபைனல் போட்டி மாஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் நடக்கவுள்ளது.கடந்த 32 ஆண்டுகளில் உலகக்கோப்பை தொடருக்கு அமெரிக்க ஆண்கள் அணி தகுதி பெற தவறியது.இதில் நேற்றய 2வதுலீக் போட்டியில் குரூப் – ஏ பிரிவின் எகிப்து,உருகுவே அணிகள் மோதின.இதில் துவக்கம் முதலே கோல் அடிக்க இரு அணி வீரர்களும் மல்லுக்கட்டினர்.

போட்டியின் 23வது நிமிடத்தில் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை,நட்சத்திர வீரர் சுராஜ் சைடு வலையில்,அடிக்க முன்னிலை பெரும் வாய்ப்பை உருகுவே அணி தவறவிட்டது.எகிப்து அணி வீரர்களின் கோல் முயற்சியும் தோல்வியில் முடிய முதல் பாதி போட்டி 0-0 என சமநிலை வகித்தது.

இதையடுத்து பரபரப்பாக துவங்கிய இரண்டாவது பாதியில்,துவக்கம் முதலே உருகுவே அணியின் ஆதிக்கமே அதிகம் இருந்தது.இரு அணி வீரர்களும் கோல் அடிக்க,கடுமையாக போராடினர்.ஒரு வழியாக 89வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில் உருகுவேவின் ஜோஸ் ஜிம்மென்ஸ் கோல் அடிக்க, உருகுவே அணி முன்னிலை பெற்றது.

பின் கூடுதலாக கொடுக்கப்பட்ட 5 நிமிடத்தில் இதற்கு பதிலடி கொடுக்க எக்ப்து அணி எவ்வளவு போராடிய போதும் கோல் அடிக்க முடியவில்லை.இறுதியில் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மேலும் படிக்க