• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய அணி வீரர்கள் ‘பேட்டிங்கில்’ முழு கவனம் செலுத்த வேண்டும் – பத்ரிநாத்

August 22, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 60ம் ஆண்டு விழா கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் நடைபெற்றது.அதில் சிறப்பு விருந்தினராக இந்திய கிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கலந்துக் கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் விருதுகளை வழங்கி பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“டி.என்.பி.எல் கிரிக்கெட் மூலம் கிரிக்கெட் விளையாட்டு மிகப்பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.உள்ளூர் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களை அடையாளம் காண்பதற்கு மிகப்பெரும் தளமாக இருக்கிறது.டி.என்.பி.எல். மூன்றாவது சீசனில்,முதன் முறையாக பயிற்சியாளராக செயல்படுவதாகவும்,விளையாடும் போதும் கூட எந்த பிரச்சனையும் இல்லாத போது ‘மேட்ச்’ பார்க்கும் போது டென்ஷனாக ஆக உள்ளது.

இந்திய அணி வீரர்களை குறை சொல்வதற்கு எதுவுமில்லை எனவும் இந்திய அணி வீரர்கள் ‘பேட்டிங்கில்’ முழு கவனம் செலுத்த வேண்டும்.தற்போதைய இளைஞர்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அதிக வாய்ப்புகள் கிடைப்பதாகவும்,ஆரம்ப காலங்களில் நன்றாக கற்றுக்கொண்டால்,எதிர் வரும் போட்டிகளில் சாதனை படைக்க சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும்,கிரிக்கெட் வர்ணனை செய்வதை முதல் வேலையாக செய்து வருவதாகவும் இதுமட்டுமின்றி,’ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்திடம் வர்ணனைக்கான ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்”.

மேலும் படிக்க