• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை அணிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு – தோனி

January 19, 2018 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் மட்டும் இல்லை, எங்கு சென்றாலும் சென்னை அணிக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு என்று தோனி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மாஹிந்திர சிங் தோனி இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மீண்டும் சென்னை அணிக்காக விளையாடவுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தோனி,

“சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது பெருமையாக உள்ளது. சென்னை எனக்கு 2ஆவது வீடு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி. எப்போதுமே சென்னை தனி சிறப்பு, என்னுடைய டெஸ்ட் போட்டியில் அதிக ஸ்கோர் இங்கு தான் பதிவு செய்தேன். சென்னை அணி மீதான எதிர்பார்ப்பு இந்தாண்டு ஐபிஎல் போட்டியை சிறந்ததாக மாற்றியுள்ளது.

சென்னை அணியின் மீதுள்ள நம்பிக்கை மற்றும் அணிக்கான அதரவே நமது பலம். நமது பலமே ரசிகர்கள் தான். தமிழ்நாட்டில் மட்டும் இல்லை, எங்கு சென்றாலும் சென்னை அணிக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. அஸ்வினை சென்னை அணியில் சேர்க்க முயற்சி செய்வோம். 18-20 வீரர்களை அணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்”. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க