இந்திய கிரிக்கெட் வீரர் ரகானே, மறைந்த தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் வீட்டுக்கு தனது மனைவி ராதிகாவுடன் சென்றார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்டில் இந்திய அணி ஒருவிதமான போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல் படுதோல்வியை சந்தித்து, தொடரை 2-0 என இழந்தது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகானஸ்பர்க்கில் நடக்கிறது. இதில் இந்திய அணி ஆறுதல் வெற்றியை நோக்கி களமிறங்கியது.
இதற்கிடையே அங்குள்ள இடங்களை போட்டிகள் இல்லாத நாட்களில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுற்றிப்பார்த்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் துணைக்கேப்டன் ரகானே தனது மனைவி ராதிகாவுடன் தென் ஆப்ரிக்க காந்தி என அழைக்கப்படும் நெல்சன் மண்டேலாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஜோகன்னஸ்பர்க், சொவடோவில் உள்ள மண்டேலாவின் வீடு தேசிய அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. 1999-ல் இந்த வீடு தேசிய பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த வீட்டை தனது மனைவியுடன் பார்வையிட்ட ரகானே, வாழ்நாளின் எஞ்சியுள்ள நாட்களில் மறக்க முடியாத வரலாற்றை நினைவு பரிசாக எடுத்துவந்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 41 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
கோவை உப்பிலிபாளையத்தில் கேலக்ஸி ஹெல்த் எஜுகேஷன் அக்குபஞ்சர் யோகா கிளினிக் பட்டமளிப்பு விழா
கோவையில் மே 28 முதல் துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்
கனடாவில் சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’ வழங்கப்பட்டது
கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் 1995ம் ஆண்டு பேட்ஜ் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்திப்பு
இந்தியாவின் கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கௌரவித்த கேபிஆர் கல்வி நிறுவனங்கள்