• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த ஆப்கானிஸ்தான் வீரர்!

October 15, 2018 தண்டோரா குழு

ஐபிஎலை போன்று ஆப்கானிஸ்தானில் ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக் டி20 போட்டி நடைபெற்று வருகிறது.இதில்,காபூல் ஸ்வானன் அணியும்,பால்க் லெஜண்ட்ஸ் அணியும் மோதின.

ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில்,முதலில் பேட்டிங் செய்த பால்க் லெஜண்ட்ஸ் அணி 245 ரன்கள் குவித்தது.246 ரன்கள் எடுத்தால் எடுத்தால் வெற்றி என காபூல் ஸ்வானன் அணி களமிறங்கியது.இப்போட்டியில்,அப்துல்லா மஜாரியின் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசினார் ஹஸ்ரதுல்லா சேஸாய்,ஒரு வைடு நீங்கலாக பாக்கி பந்துகள் மைதானத்துக்கு வெளியே பறந்தன. மேலும் 5வது சிக்சரை அடிக்கும்போது 12 பந்துகளில் அரைசதம் எட்டி யுவராஜ் சிங் அதிவேக டி20 அரைசத சாதனையையும் சமன் செய்தார்.6 சிக்சர்களை இவர் அடித்த பாணியும் கிட்டத்தட்ட யுவராஜ் சிங் ஸ்டைல் தான்.

இதன் மூலம் சேஸாய் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கேரி சோபர்ஸ்,ரவிசாஸ்திரி,ராஸ் வைட்லி,ஹெர்ஷல் கிப்ஸ்,யுவராஜ் சிங் ஆகியோர் பட்டியலில் இணைந்தார்.இதுமட்டுமின்றி டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் பட்டியலில் 3வது வீரராக சாதனை படைத்தார்.மேலும்,“கிறிஸ் கெய்ல் என்னுடைய ஆஸ்தான வீரர் அவர் முன்னிலையில் இந்த ஆட்டம் எனக்கு பரமதிருப்தி அளிக்கிறது” எனக் கூறியுள்ளார் ஹஸ்ரத்துல்லா.

17 பந்துகளில் அவர் 62 ரன்கள் விளாசினாலும் காபூல் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இதே போட்டியில் கிறிஸ் கெய்ல் ஏற்கெனவே எதிரணிக்காக 48 பந்துகளில் 2 பவுண்டரிகள் 10 சிக்சர்களுடன் 80 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.அதைபோல் ஒரே போட்டியில் 37 சிக்சர்கள் அடித்ததற்காகவும் இந்த டி20 முக்கியத்துவம் பெற்றுள்ளது.அதிக சிக்சர்கள் போட்டியில் இது 2வது இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க