• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

70 ஆண்டு சாதனையை தவறவிட்ட இந்திய அணி: ஆஸி., அசத்தல் வெற்றி!

October 11, 2017

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை 4-1 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி கவுஹாத்தியில் நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் வார்னர், முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (8), தவான் (2), கோலி (0), பாண்டே (6) என ‘டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்களை பெஹர்டெண்டிராப் பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்து வந்த ஜாதவ் (27), தோனி (13), பாண்டியா (25) நீண்டநேரம் தாக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து இந்திய அணி, 20 ஓவரில் 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர்களான வார்னர் (2), பின்ச் (8) சொதப்பலாக வெளியேறினர். பின் வந்த ஹென்ரிக்ஸ், ஹெட் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய பவுலர்களை மிகச்சுலபமாக சமாளித்த இந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 15.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 1-1 என ஆஸ்திரேலிய அணி சமன் செய்தது. இந்த தோல்வியின் மூலம் சுமார் 70 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 தொடர்களை கைப்பற்றும் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது. ஆனால் அடுத்த போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் இந்த சாதனையை இந்திய அணி வசமாக்கலாம்.

மேலும் படிக்க