• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2019-ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ள தொடர்கள் பட்டியல் வெளியீடு !

January 1, 2019 தண்டோரா குழு

2019-ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ள தொடர்கள் குறித்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

கோலி தலைமையிலான இந்திய அணிக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்தது. ஏனெனில், 14 டெஸ்டுகள், 20 ஒருநாள் போட்டிகள், 19 டி20 ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி அதிக ஆட்டங்களில் வெற்றி பெற்றது.
இதையடுத்து, 2019-ஆம் ஆண்டில் இந்திய அணி விளையாடவுள்ள தொடர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த வருடம் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளதால் இந்திய அணி குறைவான டெஸ்ட் போட்டிகளிலேயே விளையாடவுள்ளது.

BCCI வெளியிட்டுள்ள தொடர்கள் பட்டியலின் படி இந்த வருடம் இந்திய அணி 8 டெஸ்டுகளும் 19 ஒருநாள் மற்றும் 11 t20 போட்டிகளிலும் கலந்து கொள்கிறது. இதுதவிர இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டியில் குறைந்தபட்சம் 9 ஆட்டங்களில் விளையாடவுள்ளதால் இந்த வருடம் இந்திய அணி குறைந்தபட்சம் 28 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், கடந்த வருடத்தை விடவும் இது அதிக எண்ணிக்கை ஆகும்.

இதன்படி இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகள் எண்ணிக்கை

டெஸ்டுகள் – 8
ஒருநாள் – 28 (குறைந்தபட்சம்)
t20 போட்டி – 11

2019-ல் இந்திய அணி பங்கேற்கும் தொடர்கள்:

இந்தியாவில் நடைபெறவுள்ள தொடர்கள்:

5 ஒருநாள் vs ஆஸ்திரேலியா
2 டி20 vs ஆஸ்திரேலியா
3 டெஸ்டுகள் vs தென் ஆப்பிரிக்கா
2 டெஸ்டுகள் vs வங்கதேசம்
3 டி20 vs வங்கதேசம்
3 ஒருநாள் vs மேற்கிந்தியா
3 டி20 vs மேற்கிந்தியா

வெளிநாடுகளில் இந்திய அணி பங்கேற்கும் தொடர்கள்:

1 டெஸ்ட் vs ஆஸ்திரேலியா
3 ஒருநாள் vs ஆஸ்திரேலியா
5 ஒருநாள் vs நியூஸிலாந்து
3 டி20 vs நியூஸிலாந்து
2 டெஸ்டுகள் vs மேற்கிந்தியா
3 ஒருநாள் vs மேற்கிந்தியா
3 டி20 vs மேற்கிந்தியா

மேலும் படிக்க