• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

12வது ஐபிஎல் போட்டி எங்கு நடைபெறுகிறது? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

January 8, 2019 தண்டோரா குழு

ஐ.பி.எல் போட்டியின் 12-வது சீசன் இந்தியாவில் வரும் மார்ச் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய இந்தியன் பிரீமியர் லிக் எனப்படும் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர், கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வருடத்திற்கான ஐபிஎல் ஏலம் நடந்து முடிந்த நிலையில், போட்டி எங்கே நடக்கும், எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. பொதுத்தேர்தல் காரணமாக 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் போட்டிகள் வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. அதைபோல் இந்த வருடமும் தேர்தலால் ஐபிஎல் போட்டி துபாயில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், ஐ.பி.எல் போட்டியின் 12-வது சீசன் இந்தியாவில் வரும் மார்ச் மாதம் 23-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது அதில், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் உள்ளிட்டோர் அடங்கிய நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றதாகவும், மார்ச் 23 ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள், மத்திய, மாநில அரசுகள் மற்றும் பாதுகுப்பு முகமைகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் ஐபிஎல் போட்டிக்கான முழு அட்டவணை வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க