• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹிந்தியில் பதிவிட சொன்ன ரசிகருக்கு பதிலடி கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்!!

April 25, 2018 tamilsamayam.com

டிவிட்டரில் ஹிந்தியில் பதிவிடுமாறு அறிவுறுத்திய ரசிகரிடம், எங்களுக்கு ஹிந்தி கொஞ்சம்தான் தெரியும் என சென்னை அணி பதிலளித்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்குமுன் தொடங்கிய 11வது ஐபிஎல் போட்டிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், இரண்டு வருட தடைக்குப் பின் வந்துள்ள சென்னை அணிக்கு, சென்னை மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் கோலகல வரவேற்பளித்து வருகின்றனர்.

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, சென்னை அணி வீரர்களும் தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தி, அணியின் வெற்றிக்கு பாடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டிவிட்டரில் சென்னை அணி ரசிகர் ஒருவர், சென்னை அணிக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளதாகவும், எல்லோருக்கும் தமிழ் தெரியாது என்பதால், ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பதிவிடுமாறு கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளித்த சென்னை அணி,ஆங்கிலம் என்றால் ஓகே,எங்களுக்கு தோடா தோடா(கொஞ்சம் கொஞ்சம் )ஹிந்தி தான் தெரியும். அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். இதையடுத்து,சிலர் ஹிந்தியில் பதிவிடுமாறும்,சிலர் தமிழ் ஆங்கிலத்தில் பதிவிட்டாலே போதுமானது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க