• Download mobile app
13 Oct 2025, MondayEdition - 3533
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெயிட் பண்ணதுக்கு ஆஸி., வீரர்களுக்கு கிடைத்த வெயிட்டான டீல்!

August 4, 2017 tamilsamayam.com

கிட்டத்தட ஒரு மாத காலமாக வி.ஐ.பி.,க்களாக இருந்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ரூ. 2500 கோடிக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் வல்லரசான இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பிசிசிஐ.,) பின் ஓரளவு வாய்ஸ் கொடுக்கும் கிரிக்கெட் போர்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு. அவ்வப்போது தங்களது விதி மாற்றங்கள், இளம் வீரர்களின் வருகை உள்ளிட்ட காரணத்தினால் வீரர்களின் பொருளாதார பங்கீட்டில் மாற்றத்தை செய்துகொண்டே இருக்கும்.

ஆனால் கடந்த மாதம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா விதித்த வீரர்களுக்கான சம்பள ஒப்பந்தம் எந்த வீரர்களுக்கும் திருப்தி அளிக்காத காரணத்தினால், இதில் ஒரு ஆஸ்திரேலிய வீரரும் கையெழுத்திட முன்வரவில்லை. இதனால் இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலிய மோதும் பாரம்பரிய ஆஷஸ் தொடர் உட்பட நிரந்தரமாக ரத்து செய்யப்படும் நிலைக்கு சென்றது.

தற்போது நடந்த கூட்டத்தில் இதற்கு ஒரு நல்ல முடிவு கிடைத்துள்ளதாக தெரிகிறது. வீரர்களுக்கு ரூ. 2500 கோடி ஒப்ந்தத்தை வழங்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் திருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தவிர, மீண்டும் களமிறங்கி கலக்க ரெடியாக இருப்பதாக அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க