• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வந்தா ராஜாவாகத்தான் வருவேன்! மீண்டும் சென்னை அணியில் மோகித் சர்மா !

December 18, 2018 தண்டோரா குழு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்துவீச்சளரான மோகித் ஷர்மாவை ரூ. 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

ஐ.பி.எல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லிக் டி-20 கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த போட்டி இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை 11 ஐ.பி.எல் சீசன்கள் நடத்தப்பட்டுள்ளன. 12-வது ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து, 2019 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் தொடங்கியது. இதில் இந்தியா உள்பட 13 நாடுகளை சேர்ந்த 351 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். இந்த ஏலத்தில் 8 அணிகளை சேர்ந்த உரிமையாளர்கள், பயிற்சியாயளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதற்கிடையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா கடந்த 2013 முதல் 2015 வரை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கான விளையாடி வந்தார். பின்னர் 2016 -18 பஞ்சாப் அணிக்கு சென்றார். தற்போது மீண்டும் சென்னை அணிக்கு திரும்பியுள்ளார். முன்னதாக ஷமியை வாங்க முயற்சி செய்த சென்னை, தற்போது மோகித் ஷர்மாவை வாங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்துவீச்சளரான மோகித் ஷர்மாவை ரூ. 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததுள்ளது. சென்னை இன்னும் ஒரு வீரரைத்தான் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க